பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. ஆதன் எழினி சோணுட்டில், கிழ்க்குக் கடற்கரையை அடுத்துள்ள பட்டினங்களுள் செல்லுர் என்பதும் ஒன்று:அச்செல்லுனர். மன்னர்குலம் மண்கொள முயன்ற மழுவாள் கெடியோ யை பரசுராமன் வேள்விசெய்த விழுச் சிறப்புடையது என்றும், வேள்வித்தீயான் விழுப்புகழ்பெற்ற அப்பேரூர், அருந்திறற் கடவுளர் கின்று காக்கும் அருமையும் உடைத்து என்றும் கூறுவர் மதுரை மருதன் இள்நாகனர். அச்செல்லுர்க்கும் கிழக்கே, கடல் அலை ஒலிக்கும். கியமம் எனும் நகர் ஒன்று. உண்டு; அந் நியமம், கோசர் என்பார்க்கு உரித்து; நியமத்தை வாழிடமாகக் கொண்ட கோசருள், இளய ராயினர், செல்லூர்க்கு அணித்தே வந்து, ஒன்று கூடிக், கடலாடு மகளிர் கொய்து தந்த புலிநகக் கொன்றை யினேயும், கழனியுழவர் பறித்துப்போட்ட குவளையினேயும், காவற்காட்டில் மலர்ந்த முல்லையொடு கலந்து கட்டிய க்ண்ணியணிந்து ஆடி மகிழ்வர் என்று கூறுவர், ஐயூர் முடவர்ை. அவ்வூரை உரிமைபூண்டு ஆண்டிருந்தான் ஆதன் எழினி என்பானெரு பெருவீரன்; அதியமான் எழினி, கண்ணன் எழினி, தலையாலங்கானத்துத் துஞ்சிய எழினி, வாட்டாற்று எழினி ஆதன் என, எழினி’ எனும் பெயருடையார், தமிழகத்தே பலராவர். ஆதலின், அவர் தம் வரலாற்றினே அறிதற்கண் ஆராய்ச்சிப்ாளர் பெரிதும் விழிப்புடையராதல் வேண்டும், செல்லூர் ஆதன் எழினி, யானேப்போர் வல்லவன், களிற்றின்மீது வேல் எறியும் வீரம் மிக்கோன்; அவன் எறிந்த வேலேற்ற களிறுக்ள் கடுத்துயர் உற்றுக் கலங்கி அழியும். ஆதன் எழினி குறித்து அறியத்தக்கன இத்துணையவ்ே. கெடாஅத் தீயின் உருகெழு செல்லுரர்க் கடாஅ யானைக் குழுஉச்சமங் கதைய மன்மருங் கறுத்த கழுவாள் கெடியோன் முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி.