பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

二36 அகுதை ஆகவே, செல்லுர்க்கண், இளங்கோசர் ஆடி மகிழ்கின்றனர் என்பது ஒன்றைக்கொண்டே, செல்லூர்த் தலைவனேக் கோசன் எனக் கோடல் சிறிதும் பொருந்தாது. மேலும், கோசர் வழிவந்தாரைக் குறிக்க வருவது எனப்படும், “வாய்மொழி" என்பதுபோலும் அடை எதுவும் ஆதன் எழினிக்கு இல்லே. என்பதையும் நோக்குதல் வேண்டும். வேண்டுமாயின் செல்லுர்க்கு அண்மையில் வாழ்ந்த கோசர், ஆதன் எழினியின் அவைக்கள விரராக விளங் கினர் என, ஒருவாறு பொருந்துமேல் கொள்க.