பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. ஆதனுங்கன் ஆதனுங்கன் ஒரு குறுகில மன்னன், வேங்கடமலேயும் அதைச் சூழ உள்ள காடும் இவனுக்கு உரியது; சேரர்க்கு. உரியது என ஒதப்பெறும். ஆதன் என்பதை இவன் தன் பெயரோடு கொண்டுள்ளமையால், சேரரோடு யாதோ ஒரு. வகையில் தொடர்புடையன் எனக் கருதற்கும் இடம் உண்டு. ஆதனுங்கன், இரவலர் இன்மை தீர்க்கும் இனிய உள்ளம் உடையவன். கள்ளில் ஆத்திரையனர் எனும் தொண்டை நாட்டுப் புலவர் ஒருவர் இளைஞராய் இருந்த காலத்தே இவனேச் சென்று கண்டார் : தன்பால் வந்த புலவரை, ஆதனுங்கன் அன்புடன் வரவேற்று, அருகில் இருத்தி, "ஜய கோடைமுற்றி வற்கடம் உற்ற வறுமை மிகு காலத்தே, உறுபொருள் அளித்து உற்றதுயர் தீர்ப் பாருள் ஒருவகை அடியேனேயும் உள்ளுவாயாக!' என வேண்டி, வேண்டும் பொருள் அளித்துப் போற்றின்ை. "நீர் நுங்கின் கண் வலிப்பக் கான வேம்பின் காய் திரங்கக் கயங்களியும் கோடை யாயினும் ஏலா வெண்பொன் போகுறு காலை - எம்மும் உள்ளுமோ, பிள்ளேயம் பொருந! என்று ஈத்தனனே இசைசால் நெடுங்தகை.' - - (புறம்: டவுக} ஆதனுங்கன் அத்தகு போன்பினளுதல் அறிந்த, ஆத்திரையனுர்க்கும் அவன்பால் பேரன்பு பிறந்தது : அவனேத் தம் உள்ளத்தே வைத்துப் போற்றுவாராயினர்; அவனே மறப்பதும் அவர்க்கு அரிதாயிற்று அவன் மறத். தற்கரியன் என்பதை அவனுக்கே அறிவித்தார்: "அன்ப! ஆதனுங்க! என் உள்ளத்தைத் திறந்து உட்புகுந்து காண வல்லார் உளராயின், ஆண்டு, கீ குடிகொண்டிருப்பதை. அவர்கள் உறுதியாகக் காண்பர் : கின்னே யான் மறவேன் கின்னே மறக்கும் காலமும் எனக்கு உண்டாம் எனின்