பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ඒir . تقاريږي எயினன் சேரனும், சோழனும், பாண்டியனும் செங்கோல் ஒச்சிய தமிழகத்தில், அவர்கள் ஆட்சி செலுத்திய அக் காலத்திலேயே, வேளிர் என்ற வகுப்பினரும், ஆங்காங்கே யிருந்து ஆட்சிபுரிந்து வந்தனர். அவருள் ஒரு சாரார், 'வானவரம்பன் வெளியம்,” (அகம்: .இக) எனக் கூறப் பெறுவதால், சேரர்க்குரியதாய்ச் சேரனுட்டகத்ததாய வெளியம் எனும் நகர்க்கண் வாழ்ந்துவந்தனர்; அவர்கள், சேர வேந்தர்க்கு மகள் கொடுக்கும் விழுமிய குடியின ராவர். பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் மனேவியாம் மாண்புடையளாய நல்லினி என்ற கல்லாள், வெளியத்தில் வாழ்ந்த வேளிர் மகளாவள் எனப் பதிற்றுப் பத்து, இரண் டாம் பத்துப் பதிகம் கூ அவது உணர்க. அவ் வெளியத் தில் வாழ்ந்த வேளிர்கள், வெளியன் வேண்மான் என்றே அழைக்கப் பெறுவாராயினர். அவ் வெளியத்தில் வாழ்ந்த வேளிர்வழி வந்தாருள், ஆய் எயினன் என்பானும் ஒருவன்; அது, அவன், வெளியன் வேண்மான் ஆய் எயினன்,' என அழைக்கப் பெறுதலால் உறுதியாதல் உணர்க. ஆய் எயினன், தன்னைப்போன்றே வேளிர் வழி வந்தோனும், பாழி, பாரம், ஏழில் முதலாய மலைகளையும், அம் மலையடுத்த ஊர்களேயும் கொண்ட கொண்கான நாட்டை ஆண்டிருந்தோனும் ஆய கன்னைெடு நட்புப் பூண் டிருந்தான். இருவரும் உயிர் ஒத்த நண்பர்களாய் ஒன்று கலந்து வாழ்ந்தனர். ஆய் எயினன்பால் கொண்ட அள விறந்த அன்பால், நன்னன் தனக்குரிய பிரம்பு எனும் மலேக்கு, ஆய் பிரம்பு," எனவும் பெயரிட்டு வழங்கினன்; (அகம் நின்) அரசர் ஒவ்வொருவரும், அவரவர் விரும் பும் மரம் ஒன்றைத் தம் காவல் மரமாகக் கொண்டிருந்த தைப்போன்றே, வாகை மரத்தைக் காவல் மரமாகக் கொண்ட நன்னன், அம் மரத்தின் பெயரால் வாகை எனும் ஊர் ஒன்று கண்டு, அவ்வூர் ஆட்சியைத் தன் கண்பன் ஆய் எயினன்பால் ஒப்படைத்தான். கூகை موسسه. قی