பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அகுதை கிறது, பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்துப் பதிகம். தண்டகாரணியத்து ஆரியர் கவர்ந்து சென்ற ஆடுகளே ! அவரை வென்று மீட்டுக் கொணர்ந்தான், ஆடுகோட்பாட் டுச் சேரலாதன் என்று ஆரும் பத்துப்பதிகம் கூறுகிறது. காரியின் முள்ளூர் மலேயை முற்றுகையிட்ட ஆரியர்களே வேற்படை கொண்டு வென்று துரத்தின்ை காரி. இவற்றை யெல்லாம் உணர்ந்தார் கபிலர் ஆரிய அரசர் சிலர், தமிழ் காட்டிற்கு அண்மையில் எங்கோ வாழந்திருக்கின்றனர் : அவர்கள், தமிழ், தமிழர் இவர்களின் தகுதி திறமைகளே அறியாத காரணத்தினலேயே, தமிழ்நாட்டின் மீது போர் தொடுக்கின்றனர். அவர்கள் தமிழர்களின் உண்மை உயர் வினே உணர்வராயின், அவ்வாறு போரிடத் துணியார் என்று எண்ணினர்; அவர்களுக்குத் தமிழின் அருமை பெருமைகளே அறிவித்து நாட்டில் போர் நிகழ்வதைத் தடுத்தல் வேண்டும் என்று விரும்பினர். உடனே அவ் வாரியர் வாழிடத்தை அறிந்துசென்று அவர்கள் அரசன் பிரகத்தனேக் கண்ட்ார். அவனுக்குத் தமிழின் அருமையை அறிவிக்க, தமிழ் நாட்டு மக்களின் இயல்பினே ஒருவாறு உணர்த்த வல்ல கருத்துக்கள் அடங்கிய குறிஞ்சிப் பாட்டு என்ற நீண்ட பாடலேப் பாடிக் காட்டினர். அது கேட் டறிந்த அவ் வாரிய அரசன் பிரகத்தன், தமிழ் அறிவு பெற்றுத் தமிழரொடு அன்புறவுகொண்டு வாழ்த்தான்.