பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 - அகுதை உவரா ஈகைத் துவரை காற்பத் தொன்பது வழிமுறை வக்த வேளிருள் வேளே.' (புறம்:உலக இருங்கோவேள், புலிகடிமால் என்ற பிறிதொரு பெயரானும் அழைக்கப்பெறுவன் என்பதைக்கொண்டு. “வேள்.குல அரசருள் சளன் என்ற பெயருடையான் ஒருவன் இருந்தான் அவன் ஒருநாள் காட்டில் வேட்டைய்ாடிக் கொண்டிருந்தான் அப்போது ஆங்கே தவம் செய்துகொண்டிருந்த ஒரு முனிவரைப் புலி. யொன்று தாக்க நெருங்கியது ; அதுகண்டு அஞ்சிய முனிவர், அருகே, வேட் ைட பாடிக் கொண்டிருந்த சளனேக் கூவி அழைத்துப், "புலியைக் கொல் சள " என்ற பொருள் படுமாறு, 'பொய் சள பொய் சள " என்று கூறினர்; அவனும் அக்கணமே அம்பெய்து அப் புலியைக் கொன்ருன் , அவன் செயல்கண்டு மகிழ்ந்த முனிவர், அரசே மின் வெற்றி கண்டு மகிழ்ந்தேன் இ:ை வெற்றிப்புகழ் என்றும் கின்று விளக்க, இன் அ முதல் கின் மரபு பொய்சள மரபெனிப் பெயர் பெறுக" என்று வாழ்த்தி அனுப்பினுர், அப் பொய் சள மரபோடு தொடர்’ புடைய வேளிர் மரபில் வந்தவளுதலின், இருங்கோ வேட்குப் புலிகடிமால் என்பதும் ஒரு பெயராயிற்று” என்ற வரலாறு உரைப்பாரும் உளர். இருங்கோவேள் வழிவந்தார் சிலர், இருக்குவேளிர் என்ற பெயருடைய சாய்ப் புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்திருந்தனர் எனக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இருங்கோவேள் அரையத்திருந்து ஆண்டிருந்த காலத்தே பாரி இறக்க, அவன் மகளிர்க்கு மணம்செய்து வைக்கும் மாண்புமிகு முயற்சியுடையாாய கபிலர், அம் மகளிர் இருவரோடும் ஆண்டு வந்து அவனேக் கண்டார்; பாரி மகளிரை மணக்கும் தகுதிபெற்றவனே இருங்கோ வேள் என்பது உணர்ந்த கபிலர், அம் மகளிர் பெருமை யெலாம் கூறி அவரை மணந்துகொள்ளுமாறு அவனே வேண்டினர் ஆல்ை அவர் வேண்டுகோள் விணுயிற்று :