பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. இளங்குமணன் நெல்லுக்கிடையே புல்லுண்டாதல் உலகியல், கொடை வள்ளலாய்ப் புலவர் போற்ற வாழ்ந்த குமணன் குடிப் புகழ் குன்ற வந்து தோன்றின்ை இளங்குமணன் காட் டவர் போற்றும் நல்லோய்ைக் குமணன் நாடாள்வதைப் பொருளுயின்ை இவன் அண்ணனே அழித்துவிட்டு, ஆட்சிப்பொறுப்பைத் தானே மேற்கொள்ள ஆசை கொண்டான். அஃதறிந்தான் குமணன். நற்பண்பிழந்த தம்பியொடு காட்டில் வாழ்வதினும், காடு சென்று வாழ் தலே நன்று என எண்ணின்ை அவ்வாறே காட்டிற்கும் போய்விட்டான். ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தான் இளங் குமணன். அதன் பின்னரும் அவன் அமைதியுற்ருன் அல்லன்; அண்ணன் உயிரோடு உள்ளவரை, உள்ள அமைதியோடு ஊராள்வது தன்னுல் இயலாது என எண்ணினன். ஆகவே, அண்ணனேக் கொன்று அமைதி பெற எண்ணின்ை ஆல்ை, குமணனைப் போரிட்டுக் கொல்லவல்ல ஆற்றல் இழந்த அவன், அதைப் படைத் துணையால் பெற எண்ணினுனல்லன் படை வலியால் பெறலாகா அதைப் பிறிதொரு வழியால் பெறத் திட்ட மிட்டான்; அண்ணன் தலையைக் கொணர்வார்க்கு ஆயிரம் பொன் தருவேன்,' என காட்டில் பறைசாற்றி வைத்தான் என்னே அவன் கொடுமை ! - பறை சாற்றி நாள் பல ஆகியும், அவன் எண்ணிய தைப் பெற்ருனல்லன்; அவன்போலும் கொடியார், குமணன் நாட்டில் வாழ்ந்திலர்போலும். ஆண்டு பல ஆயின. ஒருநாள், பெருந்தலேச் சாத்தனர் என்ற புலவர், இளங்குமணன் இருந்து ஆளும் ஊருக்கு வந்தார். ஆண்டுக் குமணனேக் கண்டாரல்லர் கிகழ்ந்தன அறிந்தார்; வாழும் இடம் காடே ஆயினும், வருவார்க்கு வழங்கத் தவருன் குமணன் என்பதை அறிந்த புலவர், குமணன் வாழும் காடு சென்று கண்டு, அவனேப் பாடிப் பரிசில் வேண்டி நின்றர். புலவர் பேருமை யறிந்த புரவலன்,