பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎼᏮ அகுதை அவர்க்கு அங்கிலேயில் ஒன்றும் கொடுக்க இயலாமை எண்ணி வருந்தின்ை நாடிழந்து உற்ற துயரினும் பெருங் துயர் உற்ருன்; அந் நிலையில் தன் தலையைக் கொணர் வார்க்குத் தம்பி ஆயிரம் பொன் அளிப்பன் என்ற செய்தி அவன் கினேவில் வந்து நின்றது; மட்டற்ற மகிழ்ச்சி யுற்ருன் புலவரை அருகழைத்தான், 'ஐய! எவ்வாற். ருனும் யான் தம்பியால் தலேயிழப்பது உறுதி; அதை யாரோ ஒருவன் கொண்டுசென்று, பொருள் பெற்றும் போவதினும், அப் பொருள் துமக்குக் கிடைப்பதாயின், தும் வறுமை ஒழியும்; என் வாழ்வும் உயரும்; ஆகவே, ஐய! இதோ என் வாள்; இதைக்கொண்டு என் தலே யைக் கொய்து சென்று பொருள் பெற்றுப் போவிராக '. என்று கூறி வாளே அவர் கையிற் கொடுத்தான். தன் கொடைச் சிறப்பால், உலக மக்கள் உள்ளத்தே அழியா இடம்பெற்ற குமணன், அம் மக்கள் இடையே, இருந்தும் வாழ்தல்வேண்டும் என விரும்பினர் புலவர்;. உடனே, வாளோடு விரைந்தார் இளங் குமணன் இருந்த அவை நோக்கி. அவன் அண்ணன் அளித்த வாளே அவன் முன் வைத்தார்; வாள் வந்த வகையினேயும் விளங்கக் கூறினர்; கிலேயில்லா இவ்வுலகில் நிலைபெற்று வாழும் வகையினே அறிந்தாரும் சிலர் உளர். அவரெல்லாம், தம் புகழ் உலகம் உள்ளளவும் கிலேத்து வாழ வாழ்ந்து, வாழ் விழந்தனர்; அன்னுருள் ஒருவனுய் உயர்ந்துவிட்டான் உன் உடன் பிறந்தான். அவ் வுயர்வுள்ளம் இல்லாப பிறரோ, தம் பொருளேப் பிறர்க்களித்துப் பயனுருது கொன்னே இறந்தனர்; அவர் ஒருவர் வாழ்ந்திருந்தார் என்பதையும் உலகம் மறந்துவிட்டது அவருள் ஒருவ குய் உலவுகின்றனே ,ே" என அவன். கொடுஞ் செயல், அவன் உள்ளத்தை உறுத்துமாறு உணர்த்திச் சென்ருர். புலவர்தம் பொன்னுரையின் பயன் என்ன என்பதை அறிதற்காம் வாய்ப்பு இல்லே எனினும், பண்டைப் புலவர் தம் பாடற் சிறப்புணர்ந்த பலரும், இளங்குமணன் உள்ள மும் இளகியிருக்கும்; கொடைவளரக் கோலோச்சி