பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச, ஈர்ந்துார் கிழான் தோயன் மாறன் கொங்குநாட்டில், ஈஞ்சூர் என இன்று வழங்கும் ஊர், பண்டு ஈர்ந்தார் எனும் பெயருடையதாம்; அவ்வூரை உரிமைகொண்டு வாழ்ந்திருந்தான் விரன் ஒருவன் ; தோயன் மாறன் என்பது அவன் பெயர் சில ஏடுகளில் அவன் பெயர் கோயமான் எனவும் காணப்படுகிறது; பேரரசர் படையில் பணியாற்றும் போர்த்தொழில் மேற். கொண்டிருந்தான் அவன் தன்சீனப் பணிகொண்ட பேர ரசர்க்குப் போர்க்களத்தே கேடுண்டாகாவண்ணம் கின்று. காக்கும் டுேபுகழ் உடையான். பகைவர், தன் அரசர்மீது எவும் படைக்கலிங்கள் அனேத்தையும் தன் மேலேற்றுத் தடுக்கும் தறுகணுளன். அவ்வாறு தடுப்பதாலாய புண் பட்ட வடு, அவன் உடலெலாம் கிடந்து, அவன் ஆண்மைச்சிறப்பினே உலகறியத் தாற்றும். இவ்வர்.அ மாபெரும் வீரனுய் விளங்கிய மாறன், வரையாது வழங்கும் வள்ளியோனுகவும் வாழ்ந்தான்; அவன் பெருஞ்செல்வன் அல்லன்; ஆகவே, நாடோறும் தவருது வழங்குவது அவனுல் இயலாது. ஆயினும், அவன் தன்பால் வந்து இப் பார்க்கு இல்லே எனக்கூறி வறிதே அனுப்பும் இழிவுடையா னல்லன், இரவலர் சென்று அவனே இரப்பராயின், உடனே அவன் அவ்விரவலரை யெல்லாம் உடன் அழைத்துக் கொண்டு, அவ்வூர்க் கொல்லன் மனேமுன் கின்று, வறு மையால் வாடி வற்றி உலர்ந்த அவ்விரவலர் தம் வயிற்றினேன். கொல்லற்குக் காட்டி, 'இவர்கள் வறுமை நீங்கி வாழ்தல் வேண்டும்; அதற்கு வேண்டும் பொருளே வென்று வரல் வேண்டுமாயின், போருக்காம் படைக்கலங்களே நீ இன்னே ஆக்கித்தால் வேண்டுகின்றேன்" என்று வேண்டி நிற்பன்: அவ்வாறே, அவன் தரு படைக்கலத் துணைகொண்டு பகை வரை அழித்துப் பெரும்பொருள் கொணர்ந்து பரிசிலர்க்கு. உதவுவன்; அத்தகு உயர்ந்த கொடையாளன் அவன், ஈர்ந்துார்கிழான் தோயன் மாறன் அத்தகையான் என்பதை அறிந்தவராய கோளுட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக்