பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு. எவ்வி வேளிர் வழிவந்து சிறந்து விளங்கியோருள், எவ்வி என்பானும் ஒருவனவன்; அவன் பெயரையே கொண்ட வேளிர்குடி ஒன்றும் பண்டைத் தமிழகத்தே பெருமை யுற்று விளங்கிற்று எனின், அவன் பெருமையினே என்னென்பது பாரி மகளிரை மனத்தற்காம் மாண்புடை யான் எனக் கபிலராற் கருதப்பெற்ற பெரும் பேறுடை யானுய இருங்கோவேள் இவ் வெவ்விகுடியிற் பிறந்தோ வைன் எவ்வி தொல்குடிப் படி இயர்" (புறம் : உஉே} எனக் கபிலர் கூறுதல் காண்க. மிழலை எனப் பெயருடைய தொரு சிறுநாடும், அக் காட்டகத்து மிழலை, டுேர், உறத்தூர் ஆய ஊர்களும் எவ்வியின் ஆட்சிக்குட்பட்டன வாம்; மிழலை, நால்வேறு வளங்களே கனிமிகக் கொண்டது: நெல்லரியும் தொழில் மேற்கொண்ட அந் நாட்டு உழவர், ஞாயிற்றின் வெப்பம் தாங்க ஒண்ணுத காலத்தே, கடலிற். புகுந்தாடி வெப்பம் ஒழிந்து களிப்புறுவர்; வலிய மீன் படகேறிக் கடலிடையே சென்று தொழிலாற்றிக் கரை யடைந்த பரதவர், கள்ளுண்டு களிப்பதும், குரவையாடி மகிழ்வதும்ஆய மனநிறை வாழ்வினராவர். கடல்அலே அளிக்கும் ர்ேத் துவலேயினலேயே தழைத்து வளர்ந்த புன்னே மலராணுய கண்ணி சூடிய மைந்தர், வளேயணிந்து வனப்புடையராய மகளிரொடு கைகோத்து, ஆடிமகிழ்வர் கடல்முள்ளிப் பூவாலாகிய மாலையணிந்த மகளிர், பஃனதுங்கி னின்றும் பெற்ற இனிய நீரையும், கரும்பைப் பிழிந்: தெடுத்த இனிய சாற்றையும், தெங்கின் இனிய இள கீரையும் ஒன்று கலந்து உண்டு, கடல்புக்கு ஆடி மகிழ்வர். இத்தகு வளமெலாம் நிறையக் கொண்ட ஊர்களால் கிறைந்த உயர்வுடையது மிழலைச் சிறுநாடு. "கெல்லரியும் இருக்தொழுவர் செஞ்ஞாயிற்று வெயில் முனையின், தெண்கடல் திரைமிசைப் பாயுந்து; திண்திமில் வன்பரதவர்,