பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவ்வி 74. 'எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர் பூவில் வறுத்தலே போலப் புல்லென்று.” (குறுக்: க.க) "என்வி வீழ்ந்த செருவில் பாணர் கைதொழு மரபின் முன் பரித்திடுஉப் பழிச்சிய வள்ளுயிர் வணர் மருப்பு. (அகம்: கசடு) எவ்வியின் பிரிவாற்ருது வருந்திய புலவர்களுள், வெள்ளெருக்கிலேயாரும் ஒருவர்; 'களம் சென்று கடும் போர் ஆற்றிய எவ்வி, முகத்தினும், மார்பினும் புண் பல பெற்று வீழ்ந்தான்," எனப் போரிடை யிருந்துவந்த செய்தியை வெள்ளெருக்கிலேயார் விடியற்காலத்தே கேட் டார்; வேள் எவ்வியின், வில்லாண்மையும், வாள் வன்மை யும் உணர்ந்தவர் வெள்ளெருக்கிலேயார். ஆகவே, அச் செய்தியை உண்மையென உட்கொள்ள மறுத்தது அவர் உள்ளம். ஆயினும், அவர் மனம் அமைதி கொள்ளவில்லை; கேட்ட இச் செய்தி பொய்யாக வேண்டும், பொய்யாக வேண்டும் என விழைந்தது அவர் உள்ளம்; அவ் வேட்கை உந்தக் களம் சென்ருர் ஆல்ை, அக்தோ ஆங்கு அவர் கண்ட காட்சி, அவர் உள்ளத்தே உறுதுயர் அளித்தது; கணவன் இறக்கக் கைம்மை கோன்பு நோற்கும் அவன் மனேவி, அவன் கிடந்து உயிர் நீத்த இடத்தை மெழுகிப் புல்லேப்பரப்பி அதன்மீது பிண்டம் வைத்துப் படைத்து வழிபடுவதைக் கண்டார்; எவ்வி உயிரோடு வாழ்ந்த காலத்தே, உலகமே ஒருங்குதிரண்டு வந்தாற்போல் வரு வார் அனேவர்க்கும், திறந்த வாயிலே உடையணுய் வழங்கிப் பலரோடு இருந்து உண்ட காட்சியைக் கண்டுகண்டு மகிழ்ந்தவர் வெள்ளெருக்கிலேயார்; அக் கண்களால், இக் காட்சியையும் காண நேர்ந்ததே எனக் கண்ணிர்விட்டார்; அதைக் கண்டு, வருந்தி வாழ்வதினும், மாண்டு மறைந்து போதலே நன்ரும் என்று எண்ணி அப்பாற் சென்ருர். என்னே அவர் அன்பு அவர் அன்பைக்கவர்ந்த எவ்வியின் செவ்விய பண்பே பண்பு ! - பொய்யா கியரோ! பொய்யா கியரோ !