பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*76 அகுதை ஆயினுன் பரிசில் வேண்டி, வாட்டாறு நோக்கி வந்தார்க் குக் கொழுத்த இறைச்சியைச் சுட்டுச் சுவையுடைய தாக்கி அளித்தும், வடித்தெடுத்த மதுவழங்கியும் வழிபாடு செய்வன், நெய்யும் முயற்கறியும் நிறையப் பெய்து ஆக்கிய அறுசுவை உணவளிப்பன், திறந்தது திறந்தவாறே, என்றும் அடையாப் பெருவாயில் உடையதாக விளங்கும் தன் நெற்கரிசையினின்றும் நெல்லே விரும்பிய விரும்பி யாங்கே வாரிவாரித் தருவன்' என்றெலாம் எழினி யாதன் புகழ்தோன்றப் பாடிப் பாராட்டியுள்ளார், மாங்குடி, கிழார் எனும் மாபெரும் புலவர்: "கீழ்நீரான் மீன் வழங்குந்து மீநீரால் கண்ணன்ன மலர் பூக்குந்து, கழிசுற்றிய விளேகழனி, அரிப்பறையால் புள்ளோப்புக் து; நெடுநீர் தொகூஉ மணல் தண்கால் மென்பறையால் புள்ளிரியுந்து நனேக்கள்ளரின் மனேக்கோசர் தீங்தேறல் நறவு மகிழ்ச்து. திங்குரவைக் கொளத்தாங்குந்து: உள்ளி லோர்க்கு வலியாகுவன்: கேளி லோர்க்குக் கேளாகுவன்: கழுமிய வென்வேல் வேளே: வள்நீர் வாட்டாற்று எழினி யாதன் கிணயேம் பெரும! - கொழுந்தடிய குடென்கோ! ஆளானேயின் மட்டென்கோ! குறுமுயலின் கிணம்பெய்தந்த நறுநெய்ய சோறென்கோ திறந்து மறந்த கூட்டுமுதல் - முதந்து கொள்ளும் உணவென்கோ அன்னவை பலபல......வருந்திய இரும் பேரொக்கல் அருந்தெஞ்சிய அளித்துவப்ப கத்தோன்." (புறம்: க.கr}