பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அகுதை கொண்டிருந்த தொடர்பை மறந்து, அவரைப் பகைத்துக் கொண்டு, அவர்க்குத் துயர் தருதல் கூடாது. அது சான்றேர் செயலும் அன்று: 'அழிவந்த செய்யினும் அன் பருர் அன்பின், வழிவந்த கேண்மை யவர்.' இரப்பாரைக் கண்டு எள்ளி நகைத்தலேயும், பிறர் வறுமை கண்டு வாட்டம் கொள்ளாது, அதைத் தன் வாழ் வின் உயர்விற்குப் பயன்படுத்திக் கொள்வதையுமே இன் றைய உலகில் யாண்டும் காண்கிருேம். இங்கிலே இருப்ப தாலேயே, உலகம் அமைதி இழந்து அல்லல் உறுகிறது: 'நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லே' என்ற உண்மையை உணர்ந்து தன்னேப்போன்றே, உலகோர் அனே வரும் உயர்ந்து வாழ வேண்டும் என்று விரும்பி, அதற் காக உழைப்பதே தனக்கும் பிறர்க்கும் கலம் தரு பெருஞ் செயலாம் என்பதை உணர்ந்தவூர் மட்டுமே வாட்டம் ஒரு பாலும், ஆட்டம் ஒருபாலும், வறுமை ஒருபாலும், வளமை ஒருபாலும், தாழ்வு ஒருபாலும், வாழ்வு ஒரு பாலும் இருப் பது காண, உளம் நடுங்குவார்; அந் நடுங்கும் உள்ளம், எல்லா மக்கட்கும் உண்டாயின், உலகம் அன்றே உய்வு பெற்று உயர்ந்துவிடும். ‘எப்படியாவது வெற்றிபெற வேண்டும்; எம் முறை யைக் கையாண்டாவது வெற்றி காண வேண்டும்' என எண்ணுவது பேடிச் செயல்; இன்றைய உலகப் போர்த். தலைவர்கள், இதையே போர்த் தந்திரம் எனப் போற்றுகின் றனர்; உண்மை விரன, வெற்றி தரும் வழி, பழி தரும் வழியாக இருத்தல் கூடாது என்பதில் கருத்துடையளுவன்;. 'கான முயல் எய்த அம்பினில் யானே, பிழைத்த வேல் ஏந்தல் இனிது” என்ற எண்ணம் அவன் உள்ளத்தே தோன்றுதல் வேண்டும் 'அழியுகர் புறக்கொடை அயில் வேலோச்சாக் கழிதறு கண்மை"யைக் காதலிக்க வேண்டும் அவன். அதுவே உண்மை வீரனுக்கு அழகாம். இம் முப்பெருங் குணங்களால் சிறந்தார் ஒருவர் எவர்க்கும் அஞ்ச வேண்டுவதில்லை. எவர்க்கும் பணிந்து: