பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏறைக்கோன் 79 போக வேண்டுவதும் இல்லே! எங்கும் அவர் பெருமித மாகவே வாழலாம்; அரசரும் அறிஞரும் கூடிய அவையி லும் அவர் நிலை உயர்ந்தே திகழும்; அரசரும் மதிக்க வாழும் பெரு வாழ்வு அவர்க்கே உண்டாம். ஏறைக்கோன்பால், முன்னர்க் கூறிய முக்குணங்களும் நிறைந்து நின்றன. ஆகவே, அவன் அரசவை கண்டும் அஞ் சாது வாழும் வாழ்வுடையனுயின்ை ஏறைக்கோன் சிறப் பையும், அவன் கானக நாட்டின் நல்லியல்பையும், அவன் குடியிற் பிறந்த பெண்பாற் புலவராய குறமகள் இள எயினி யார், தாம் பாடிய பாட்டொன்றில் வைத்துப் பாராட்டி யுள்ளார் : 'கமர்தம் தப்பின் அதுநோன் றல்லும், பிறர் கையறவு தான் காணுதலும், படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும், வேந்துடை அவையத்து ஓங்குபு கடத்தலும் நூம் மோர்க்குங் தகுவன அல்ல; எம்மோன் சிலசெல மலர்ந்த மார் பின், கொலைவேல், கோடல் கண்ணிக், குறவர் பெருமகன், ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை எற்படு பொழுதின் இனந்தலே மயங்கிக் கட்சி காணுக் கடமான் கல்லேறு மடமான் நாகுபினை பயிரின், விடர்முழை இரும்புவிப் புகர்ப்போத்து ஒர்க்கும் பெருங்கல் காடன் எம் ஏறைக்குத் தகுமே.” (புறம்: கடுள}