பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ0. ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் புதுக்கோட்டைத் தனியரசின் கீழிருந்த ஊர்களுள் ஒல்லேயூர் என்பதும் ஒன்று இப்போது, அது ஒலிய மங் கலம் என்ற பெயரால் வழங்குகிறது. சோனுட்டிற்கும், பாண்டிநாட்டிற்கும் எல்லேயாக ஒடும் வெள்ளாற்றின் தென்கரை நாடுகள் தென்கோளுடு எனவும் வடகரை காடுகள் வடகோளுடு எனவும் வழங்கப் பெறும். தென் கோனுட்டின் மேலேப்பகுதியே ஒல்லையூர் நாடாம். அவ் வொல்லையூரில் வாழ்ந்திருந்தான் வீரன் ஒருவன், ஒல்லையூர் கிழான்மகன் பெருஞ்சாத்தன் என அழைக்கப்பெற்ற அவ் வீரன், தன் ஆண்மை தோன்ற, ஆடவர் பலரை வென்றவன் அவ் வெற்றிக்குத் துணேபுரிந்த வேற்படை யுடையான் விரர் பலர் சூழ வாழ்ந்த அப் பெருஞ்சாத் தன், பேரன்புடையராய மகளிர் பலரை மணந்தும் இருக் தான் தன்னேப் பாடிவரும் பாணர்க்குப் பரிசில்பல கல் கும் பேருள்ளம் உடையான்; இவ்வாறு பெருஞ்சாத்தன், பல்லாற்ருனும் சிறந்து விளங்கவே, அவன் நாட்டு வாழ் மக்களும், அவன் நாடு நோக்கி வருவார் பிறரும், அவன் நாட்டில் மலர்ந்து மணங்கமழும் முல்லே மலர் குடி மகிழ்ந்து வாழ்ந்தனர்; அத்தகு வாழ்வால் வனப்புற்று விளங்கிய அவ் வொல்லேயூர்க்கும் தொல்லே வந்துற்றது. பெருஞ்சாத் தன், பிறவாப் பெருகிலே பெற்றுவிட்டான்;அவன் பிரிவினேப் பொருத, அவன் வீரரும் பிறரும் மகிழ்ச்சி இழந்தனர் : மலர்குடி வாழும் மனம் நிறை வாழ்வை வெறுத்தனர் அக் கிலேயிலும், தன் இயல்பிற் குன்ருது பூத்துக் கமழும் முல்லை யைக் கண்ட புலவர் ஒருவர், "அந்தோ! முல்லையே! அணி வாரைப் பெறமாட்டாத ,ே ஒல்லையூர் நாட்டில் ஏனே மலர் கின்றனே?" என்று கூறி முல்லைக்கு வருந்துவார் போல், ஒல்லையூர்கிழான்மகன் பெருஞ்சாத்தனுக்கு வருந்தியுள்ளார்: "இளையோர் சூடார்; வளையோர் கொய்யார்; நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான்; பாடினி அணியாள்; ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் காட்டே." (புறம்: உசஉ)