பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அகுதை கத் தொடங்கி, இதுகாறும், சேரர், சோழர், பாண்டியர், வள்ளல்கள் என்ற பெயருடைய நூல்கள் நான்கினுள் எண்மர் வரலாறு உரைக்கப் பெற்றுள்ளன. அவ்வரிசை யுள், ஐந்தாவதாய இந் நூலில், அகுதை முதல் திதியன் சருக, நாற்பத்து நால்வர் வரலாறு ஓரளவு வரையப் பெற்றுளது. ஈண்டுக் கூறப்பெறும் நாற்பத்து நால்வரும் அரசர்க ளாகார். நாடாள் அரசர் சிலர் ஊராள் தலைவர் சிலர் வீரர் சிலர் வள்ளியோர் சிலர், இவர் அனேவரும் ஓரினத்தாரும் அல்லர் இவருள், சேரரும் உள்ளனர்; சோழரும் உள்ள னர் : பாண்டியருள்ளும் சிலர் உள்ளனர் ; வேளிர் சிலர் : கோசர் சிலர். இவர்கள் அனைவருமே, புலவர்களால் கண்டு பாராட்டப் பெற்றவர்கள் எனக் கூறிவிடல் இயலாது. அவருட் சிலரை, அவர்கள் பார்த்துப் பாராட்டிப் பாடியுள் யுள்ளார்கள். சிலரைப் பற்றித் தாம் அறிந்தவற்றை, ஏற்ற இடம் நோக்கி, எடுத்துக் கூறியதல்ை, அறியப் பெற்ருர், சிலர். இவர்கள் எல்லோரும் தமிழ் நாட்டிலேயே பிறந்தவரு. மாகார். பிற நாட்டிற் பிறந்து, தமிழ்நாடு போந்து வாழ்ந் தாரும் உள்ளனர் . ஆல்ை அவர்கள் அனேவருமே, தமிழ் மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர் தமிழ்: வளர்ச்சியில் கருத்துடையவர் என்பதில் சிறிதும் ஐயம். இல்லை. அன்னர் வரலாற்றினே உரைக்கும் இச் சிறு நூலை எடுத்துப் படித்துப் பயனுறுவோமாக. -