பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஉ. கட்டி தமிழகத்தின் வடவெல்லேக்கண் வாழ்ந்த வீரர்களுள் கட்டி என்பானும் ஒருவன் ; வேற்றுமொழி வழங்கும் வடுகநாட்டை அடுத்து வாழ்ந்திருந்த அவன் வேற்படை யால் விறு பெற்றவன் ; வெல்லும் போர் வல்லவன்; இத்துணே வல்லயை அவன், ஒருகால், பாணன் எனும் வட காட்டு மற்போர் வல்லாகுெடுகூடி, உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த தித்தன் வெளியனுெடு போரிடுவான் வேண்டி, உறையூர்க்கண் வந்திருந்தான். ஒருநாள், தித்தன் நாளவைக்கண், பரீசில் வேண்டி வந்திருக்கும் புலவர், பொருநர், பாணர்,கூத்தர், முதலாயினர் பறை யொலித்தும், பாக்கள் புனேந்தும் வாழ்த்தும் வாழ்த் தொலியைக் கேட்டான் பலரும் போற்றப் பெருவாழ்வு வாழும் தித்தனெடு போரிட்டு வெல்லுதல் இயலாது என் பதை உணர்ந்தான் ; உடனே, ஒருவரும் அறியாவாஅ உறையூரைவிட்டே ஓடிவிட்டான்; பாணனெடு கூடிப் பகை வெல்லுதல் இயலாது என்பதறிந்த கட்டி, தன் காட்டை அடுத்துப் பேரரசாய் வாழ்ந்த சேரன் படையிற் சேர்ந்து பணியாற்றினுன் : அக்காலே, சேரனும், சோழ னும், பகைகொண்டு கழுமலம் எனுமிடத்தே படையொடு இருந்தனர். சேரன் படைத்தலேவர்களாகப் பணியாற்றிய நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், புன்றுறை, கனேயன் முதலியோர்க்குத் துணையாகக் கட்டியும் அவண் கூடி யிருந்தான் ஆல்ை, அந்தோ! ஆண்டும் அவன் தோல் வியே கண்டான், சோழர் படைத்தலைவனுய்ப் பணியாற் றிய பழையன் எனும் பெருவிரன், அக் கழுமலக் களத் தைப் பிணக்களமாக்கிப் பருந்துக்கு விருந்திட்டான் ; கணையன் ஒருவன் ஒழிய ஏனேய வீரர் அனேவரும் ஒருங்கே அழிந்தனர் அவ்வாறு அழிந் சாருள் கட்டியும் ஒருவ வைன் எனல் கூறவேண்டா வன்ருே ! 'குல்லேக் கண்ணி வடுகர் முனேயது பல்வேல் கட்டி கன்னட் டும்பர், மொழிபெயர் தேயம்'. (குறுங் : க.க) "نمسيس.