பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூச. கழுவுள் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியராகிய பேரரசர் ஆண்டிருந்த காலத்திலேயே, அவர்கள் நாட்டின் ஒருசில பகுதிகளில், அவர்க்கு அடங்கியும், அடங்காமலும், ஆயர், எயினர், பரதவர், வேளிர்போலும் இனத்தவர் சிலர் அர சமைத்து வாழ்ந்துவந்தனர். அன்னர் ஆட்சி, ஒரோவழிப் பேரரசுகளுக்கு அரணுய் அமையும்; ஒரோவழி அழிவு தருவனவாகும்; அவற்ருல் தம் ஆட்சிக்கு அழிவன்றி ஆக்கம் இல்லை என உணர்ந்த பேரரசர்கள் படையெடுத்துக் சென்று அவர்களே அழித்து மீள்வர். அவ்வாறு அர சமைத்து வாழ்ந்தாருள் கழுவுள் என்பானும் ஒருவன்; கழுவுள் சேர ஆட்சிக்குட்பட்ட நிலத்தின் ஒரு பகுதிக் கண், அரசமைத்து வாழ்ந்த இடையர்குலத் தலைவனுவன். அவன் இருந்து அரசாண்ட ஊர் காமூர், காவூர் எனவும் வழங்கப்பெறும். கழுவுள் வேற்படை வல்லவன் வள்ளன் மையும் உடையான் என்றும், அவன் காமூர்க்கண், பூதத்தின் அருளால் வந்ததொரு வேங்கைமரம் உண்டு என்றும் மதுரை மருதன் இளநாகனர் என்பார் கூறுவர் : வென்வேல் மாவண் கழுவுள் காமூர் ஆங்கண் பூதம் தந்த பொரியரை வேங்கை." (~ £ õ: கூகடு) தனக்குரிய நாட்டின் ஒரு பகுதிக்கண் இருந்து கழுவுள் ஆட்சிபுரிதலே விரும்பாத தகடுர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை, காமூரை அழித்துக் கழுவுளே அடக்கக் கருதின்ை அவ்வாறே அவன் பெரும்படை யொன்று சென்று காமூரை முற்றிக்கொண்டது; அவ் ஆரகத்தே வாழும் ஆயர், தம் ஆனிரைகளே மேய்நிலங் கட்குக் கொண்டு செல்வதோ, தமக்கு வேண்டும் உணவு முதலாம் பொருள்களே ஊருட்கொணர்வதோ செய்யமாட் டாது வருந்தினர் ஆயர் படும் துயரை அறிந்தும், அவர் தலேவளும் தகுதியுடைய கழுவுள், சோர்படையைப் அ.-7