பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 அகுதை போரிட்டுத் துரத்த எண்ணுது, அவ்வூரகத்தே அடங்கி யிருத்தலேயே மேற்கொண்டான். அவனுல் தம் துயர் துடைத்தல் இயலாது என்பதை உணர்ந்த ஆயர், அவன் அறியாவாறே புறம்போந்து, சேரர் படைத் கலேவர்க்கு ஆவும், ஆனேறும் திறையாகத் தந்து பணிந்தனர்; படைத் தலைவர்களும் அவர் அளித்தன ஏற்று முற்றுகை ஒழித் தனர்; தன் ஊர்வாழ் ஆயர்செயல் அறிந்தான் கழுவுள்; இனியும் பணியாது இருத்தல் பயன்தராது என்பதை உணர்ந்தான்; ஆயினும் பலர் காணப் பணிதலே நாணிற்று அவன் உள்ளம், ஆகவே, ஊரவர் எவரும் எழுந்து தொழில் தொடங்குதற்கு முன்னரே, ஊரில் தயிர்கடை யொலியும் எழுதற்கு முன்னரே, ஒருவரும் உணராவாறு, இருளிலேயே சென்ஆ படைத்தலேவரைப் பணிந்து பகை யொழிந்து வாழ்ந்தான் : - 'ஏருெடு கன்றுடை யாயம் தரீஇப் புகல்சிறந்து புலவுவில் இளேயர் அங்கை விடுப்ப மத்துக் கயிறு ஆடா வைகற்பொழுது கினேயூஉ ஆன் பயம் வாழ்கர் கழுவுள் தலைமடங்க.' - (பதிற்றுப்:எக) தன்னேக் கேளாதே, தன்கீழ் வாழ்வார் பகைவரைப் பணிந்தமையான், தானும் பணியவேண்டிய கிலே வந்துற். றதை எண்ணி எண்ணி வருந்தின்ை கழுவுள் அப்பழியை எவ்வாற்ருனும் துடைத்தல் வேண்டும்; சேர அரசனின் ஆனேக்கு அடங்காப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று அடித்தது:அவன் உள்ளம் அதற்கு ஏற்றதொரு காலத்தை யும் எதிர்நோக்கி யிருந்தான்; அதற்கு ஏற்ப, சேரநாட்டு அரசியலிலும் மாறுதல் உண்டாயிற்று தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை இறந்துவிட்டான்; இளஞ் சேரல் இரும்பொறை என்பான் அரியணை ஏறினன்; இவ் வரிய வாய்ப்பை நழுவவிடாது, கழுவுள் தன் தனியாட்சி உரிமையை கிலேநாட்டிக் கொண்டான்: ஆஇல், அது கெடிதுநாள் கிற்கவில்லை; தகடுர் எறிந்தான்ேப் போன்றே,