பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩. ௮. ஓதஞானி

ஞானி என்ற சொல் பேரறிவுடையவன் எனும் பொருள் உடையதாம்; ஓதஞானி என்பது பரந்த அறிவுடையன் எனப் பொருள்படும் என்று கூறுப. இவர் பாடிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம் பெற்றுளது.

இற்செறிக்கப்பட்ட தலைமகளைக் காண அவள் வருமாறு கூறிய குறியிடத்தே வந்த தலைமகன், ஆண்டு அவள் நெடிது வாராமையால் மீண்டு போய்விட்டான்; அவன் சென்றபிறகு ஆண்டுவந்த அவள், ஆங்கே அவன் தேர் வந்து சென்றது என்பதை, அதன் சக்கரம் செய்த வடுவாலும், அச்சக்கரத்தால் ஒடிக்கப்பட்டு ஆங்குக் கிடக்கும் நெய்தற்பூக்களாலும் உணர்ந்தாள்; மறுநாள் தலைவன் வந்து தன் வீட்டின் புறத்தே இருந்தக்கால், தான் ஆண்டு வரவில்லை என, அவன் பழிகூறல் பொருந்தாது; தான் ஆண்டு வரும்வரைக் காத்திராது கடிது மீண்டு, ஆங்குப் பின்னர்வந்த, தான் ஏமாறுதற்குக் காரணமாய் அவனே தவறுடையான் என்பதைக் கூறுவாள் போல், யான் ஆண்டுச் சென்றேன்; ஆங்கே அவர் தேர் சென்ற வடுவையும், அத்தேரால் அழிந்த மலர்களையும் கண்டேன் எனக் கூறினாள் எனப் பாடியுள்ளார் புலவர் ஓதஞானியார்;

“பூண்வனைக் தன்ன பொலஞ்சூட்டு நேமி
வாண்முகம்‌ துமிப்ப வள்ளிதழ்‌ குறைந்த
கூழை நெய்தலும்‌ உடைத்து, இவண்‌ ‌

தேரோன்‌ போகிய கான லானே.”  (குறுந்: ௨௨௭)



அ. வி.—8