பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஒதலாந்தையார்

115


மையில் தவறிவிட்டாள் ஆகவே, அறநெறியறிய அவள் மாட்டு மாறாச்சினம் உண்டாயினும், அவள் தன்னைப் பேணி வளர்த்தவள் ஆதலின் அத்தாய்மாட்டு மாறாப் பேரன்பும் அத்தலைமகட்கு உண்டு; அவள் அறியவாறு வந்துவிட்ட அஃது ஒன்றற்கே அவள் வருந்துவள்; மேலும் தான் செல்லும் வழி, எதிர்ப்பட்டார் உயிரை எல்லாம் கொள்வதே குணமெனக் கொள்ளும் கொடிய வேங்கைகள் வாழும் மலைகளை இடையிடையே கொண்ட நீண்ட பெரு வழியாம் என்பதை அவள் அறிவாளாதலின், அந்நெறி சென்ற தன் மகட்கு என்ன துயர் நேர்ந்ததோ என்ற எண்ணம் எழஎழ, அவள் துயர் மேலும்.மேலும் பெருகும் ன்ன்பதை அத்தலைமகள் அறிவாள்; ஆகவே அவள் துயர் நீங்குமாறு, தான் எத்தகைய இடையூறுமின்றி இனிது செல்வதை அவட்கு எடுத்துரைப்பாரை எதிர்நோக்கி நடந்தாள். அவ்வழியே, தனக்கும் தன் தாய்க்கும் அறிந்தார். சிலர் செல்வதைக் கண்டாள்; அவர்களை அடுத்து வணங்கி வாழ்த்தினாள்; "ஐயன்மீர்! எம்மூர் செல்லும் நீவிர், ஆண்டு என் அன்னையைக் கண்டு, நும்மகள், எத்தகைய இன்னலுமின்றி, கொடுவழிகளை எல்லாம் கடந்து சென்று விட்டாள்; இவ்வாறு அவள் இனிது செல்வதற்குத் துணையாவார், கடுஞ்சினம் மிக்க காளைபோலும் ஆற்றலும், அழகும் உடைய அவள் காதலனும், அவன் தேருமேயாம் என அறிவிக்க வேண்டுகின்றேன்" என வேண்டிகின்றாள். என்னே அவள் அன்பு: இவ் அன்புள்ளத்தை அழகொழுக எழுதிக் காட்டியுள்ளார் புலவர் ஒதலாந்தையார்.

‘’கடுங்கண் காளையொடு நெடுங்தேர் ஏறிக்
கோள்வல் வேங்கைய மலைபிறக்கு ஒழிய
வேறுபல் அருஞ்சுரம் இறங்தனள் அவள் எனக்
கூறுமின்; வாழியோ! ஆறுசெல் மாக்கள்!
நற்றோள் நயந்து பாராட்டி
எற்கெடுத் திருந்த அறன் இல் யாய்க்கே..‘’ (ஐங்: ௩௮௫)

தன் மகள், தான் விரும்பிய ஒர் ஆண்மகன்தன்னோடு அவனூர் சென்றுவிட்டாள் என அறிந்த அக்காலத் தாய்,