பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒதலாந்தையார்

117


முற்கூறாது, அவனும், அவளும் வரக்கரைக என அவனை முற்கூறியதோடு, இருவரை ஒருங்கே கூறுங்கால், அவ்விருவரின் உயர்ந்தார் பெயரோடு இணைத்து வழங்கவேண்டிய ஒடு உருபை, காளையொடு அஞ்சில் ஒதிவரக் கரைக' என அவன் பெயரோடு இணைத்து வழங்கியது, தாய், தன் மகளின் காதலன்பால் எத்துணைப் பெருமதிப்புக் கொண்டுளாள் என்பதை உணர்த்தி நிற்றல் காண்க. அழகிய இப் பொருளெலாம் ஒருங்கே தோன்றப் பாடிய புலவன் பெருமையினைப் பாராட்டிப் பெருமை கொள்வோமாக.

"மறுவில் துளவிச் சிறுகருங் காக்கை!
அன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்
பச்சூன் பெய்த பைங்கின வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவெண் மாதோ;
வெஞ்சின விறல்வேல் காளையொடு
அஞ்சில் ஒதியை வரக்கரைக் தீமே!’ (ஐங் :௩௪க)


பொருள் கருதித் தன் மனைவியையும், மகனையும் பிரிந்துசெல்ல விரும்பும் ஒரு தலைவனை நோக்கி,

"அரும்பொருள் செய்வின தப்பற்கும் உரித்தே;
பெருங்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்:”

நன்றில் கொண்க! நின்பொருளே;
பாவை அன்னநின் துணைப் பிரிந்து வருமே”

"நின்னயங் துறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ

இறுவரை நாட! நீ இறந்துசெய் பொருளே."

(ஐங்:௩௦௨,௩௦௭.௩௦௯)


என்றெல்லாம் கூறி அவனைப் பிரிந்து செல்லாவாறு தடை செய்ய விரும்பினாள் தோழி எனப் பாடிப், பொருளின் சிறுமையும், தலைவியின் பெருமையும் தோன்றப் பாடியுள்ளார் புலவர்.

ஒரு தலைமகன், பொருள்தேடிக் கொணரப் பிரிந்து சென்றக்கால், கார்காலம் தொடங்கும் காலத்தே மீண்டு