பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

அதியன் விண்ணத்தனார்


பாற்பட்ட கடலும் இடத்தால் மிகமிகச் சேயவாம்; அவ்விடங்களில் தோன்றும், பொன்னும், முத்தும், பவழமும், மணியும் அவை தோன்றும் இடங்களை நோக்க மிக மிகச் சேயவாம் ஆயினும், அழகிய ஒர் அணியினை ஆக்க, அவையனைத்தும் ஒன்றுசேரக் காண்கிறோம் கண்டு பழகாத இருவர், மிகமிகச் சேயநாடுகளில் வாழ்ந்த இருவர் ஏற்ற காலத்தில் ஒரிடத்தே வந்து ஒன்றுகூடிய செயல், புலவர்க்குப் பொன் முதலாம் பொருள்களின் இயல்பினே கினைப் பூட்டிற்று; ஒர் அழகிய பா உருவெடுத்தது.

‘’பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய
மாமலை பயங்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து
அருவிலை நவ்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு,என்றும், சான்றோர்
சான்றோர் பால ராப;
சாலார்,சாலார் பாலரா குபவே.‘’ (புறம் : உகஅ)

தலைவன் ஒருவன், வினைவயிற் பிரிந்து மீண்டு வந்து தலைவியோடு கூடி இன்புற்றிருக்கையில் மறுவலும் பிரிய வேண்டிய நிலை உண்டாயிற்று. அவனைப் பிரிந்திருத்தல் தன்னால் இயலாது என்பதைத் தலைவி உணர்ந்தாள். தன் காதற் காமத்தை எடுத்துக்கூறல் ஆண்மகனுக்கு அமையுமேயன்றிப் பெண்டிர்க்குப் பெரிதும் இழுக்காம் ; எனினும், தன் காமத்தின் கொடுமையினை எடுத்துக்கூறித் தடுக்காதுவிடின் தலைவன் பிரிவன்; அவன் பிரிந்தால் அவள் உயிர் அவள் உடம்பினின்றும் பிரிந்துவிடுதலும், கூடும். ஆகவே, இழுக்கு என எண்ணாது, வரம்பையும் கடந்து தன் காமத்தை அவனுக்கு அறிவிக்க எண்ணுகின்றாள்; ஆனால், அவள் பெண்மைக்குணம் மீண்டும் தடுக்கிறது, செய்வதறியாது திகைத்து, தோழியை. அடுத்து இங்நிலையில் செய்வன யாது என உசாவி நின்றாள். பெண்ணுள்ளம் படும் பெரும்பாட்டினைப் புலவர் நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார், நற்றி&ணச் செய்யுள் ஒன்றில்: