பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரும்பிள்ளைப்பூதனார்

169

 கத்தால் மேலிருக்கும் மைந்தர் செலுத்தவும் செல்லாமல், ஒரு புலிமுக மாடத்தருகே நின்றுவிட்டது. களிற்றின் காதலால் கட்டுண்ட அப்பிடியும், மேலுள்ள மகளிரோடே நடை தளர்ந்து சென்றது; களிறு நின்ற புலிமுகமாடத்தே பண்ணி வைத்திருந்த புலியுருவத்தைக் கண்டது; அதை உயிருடைப் புலி எனப் பிறழ உணர்ந்த பிடி, அப்புலியால் களிற்றிற்கு ஊறு உண்டாம் என உளங்கொண்டு, அஞ்சிப் பாகர் அடக்கவும் அடங்காது அங்கும் இங்கும் ஒடி அலைக் கழிக்கலாயிற்று: பிடியின் செயல் கண்ட களிறும், பாகர் தம் அங்குசத்திற்கு அடங்க மறுத்தது. களிறு, பிடி இவற்றின் போக்கில் உண்டான இம்மாற்றத்திற்குக் காரணம், களிறு புலிமுக மாடத்தருகு நிற்பதே என்பதை உணர்ந்த மைந்தர், அதை ஆண்டு நின்றும் போக்கினர்; பிடியும் பணிந்தது; களிறும் கதனடங்கிச் சென்றது. மகளிரும், மைந்தரும் நடுக்கம் தீர்ந்து நன்கு சென்றனர். மதுரைப் பெருந்தெருவில் நடந்ததொரு நிகழ்ச்சியை நமக்குக் காட்டுவார்போல், காட்டு வாழ் உயிர்கள் காட்டும் கனிவு இத்தகைத்து என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்

புலவர் :


'அணிநிலை மாடத்து அணிநின்ற பாங்காம்
மடப்பிடி கண்டு வயக்கரி மாலுற்று
நடத்த நடவாது நிற்ப, மடப்பிடி
அன்னம் அனையாரோடு ஆயா நடைக்கரிமேல்
சென்மனம் மாலுறுப்பச் சென்று எழில்மாடத்துக்
கைபுனை கிளர்வேங்கை காணிய வெருவுற்று.
மைபுரை மடப்பிடி மடல்லார் விதிர்ப்புறச்
செய்தொழில் கொள்ளாது மதிசெத்துச் சிதைகரக்
கூங்கை மதமாக் கொடுந்தோட்டி கைநீவி
நீங்கும் பதத்தால் உருமுப் பெயர்த்தந்து
வாங்கி முயங்கி வயப்பிடி கால்கோத்துச்

சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல் .'

(பரிபாடல், க0 : ச௧-௫௨.)