பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்

27

அரிதுபெறு சிறப்பின் காமத்து இயற்கையும்
இந்நிலை அறியா யாயினும்..........
மரநிழல் அற்ற இயவின் சுரன் இறந்து
உள்ளுவை யல்லை யோ?” (அகம் : ௩௫௩)

“வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி
மனைமாண் கற்பின் வாணுதல் ஒழிய
........................................
அத்தம் செலவருங் குரைய என்னாது, சென்று
........................................
யாமே எமியம் ஆக, நீயே
ஒழியச் சூழ்ந்தனை யாயின்,........
பிரியா யாயின் நன்றுமன் தில்ல;
அன்றுநம் அறியாய் ஆயினும், இன்றுநம்
செய்வினை ஆற்றுற விலங்கின்
எய்துவை அல்லையோ பிறர்நகு பொருளே.”

                                                                 (அகம் : ௩௩)

மள்ளனார் பாடல்களை மேலும் நோக்கின், அவர் சேரனுக்குரிய கொல்லிமலையினை அறிந்துள்ளார் என்பதும், உழவர் பல்லெருத்துள்ளும் நல்லெருது தேடுவர் என்ற உழவர் இயல்பறிந்தவர் என்பதும், குதிரை நூல் வல்லவர் என்பதும், உள்ளம் கலங்கியவழி உற்ற தொழில் நடைபெறாது என, உள்ளமும், உடலும், உறவுடையன என உணர்ந்தவர் என்பதும், அக்கால மகளிர் மேற்கொள்ளும் “தோளி” போன்ற ஆடல் வகைகளை அறிந்தவர் என்பதும் புலனாம். அவர் பெருமையினை, அவர் பாடற் பெருமையால் அறிந்து பாராட்டுவோமாக.