பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

அதியன் விண்ணத்தனார்


கூறும் பல்வேறு அறவுரைகளும் அவர் தம் ஆசிரியம் பெருந் தகைமையினைத் தோன்றச் செய்தல் காண்க:

"ஆற்றுதல் என்பதொன்று அலந்தவர்க்கு உதவுதல்;
போற்றுதல் என்பது, புணர்ந்தாரைப் பிரியாமை;
பண்பு எனப்படுவது, பாடறிந்து ஒழுகுதல்;
அன்பு எனப்படுவது, தன்கிளை செறாஅமை;
அறிவு எனப்படுவது, பேதையார் சொல்நோன்றல்;
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை;
நிறை எனப்படுவது, மறைபிறர் அறியாமை;
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;
பொறை எனப்படுவது, போற்றாரைப் பொறுத்தல்."

ஆசிரியர் நல்லந்துவனார் பாடல்கள் அரிய நயம் செறிந்தன. அப் பாடல்களின் அருமையினை, அப்பாக்களின் இடையிடையே அவர் மேற்கொள்ளும் உவமையால் அறியலாம்; அவர் உவமைகளிற் பெரும்பாலன, அற நெறியினை உணர்த்துவனவாகவே காணப்படும்; ஓர் அற நெறியினை உணர்த்த, மற்றோர் அறநெறியினையே உவமையாகக் கொள்வர். அவ்வாறு வந்தனவும், பிறவும் ஆய அறநெறிகள் முன்னரே அறிந்தோமாதலின், அவ்வழி வாராப் பிற உவமைகளுள் சிலவற்றை ஈண்டு நோக்குவோம்.

மலையிற் பிறந்த ஆறு, தான் பிறந்த அவ்விடத்தின் நீங்கிக் கடலைச் சென்று அடைதல், ஒரு பெண், பிறந்த தன் பெற்றோரை நீத்து, தன்னைக் காதலிக்கும் கணவன் வீடு செல்வதை ஒக்கும் எனவும், மலையிற்றோன்றிய வெள்ளம் வையையாற்று வழியே சென்று கடலிற் கலப்பதற்கு முன், மதுரையிடத்தே மக்கள் உட்புகுந்து ஆடித் திளைத்தல், ஒரு பெண்ணைக் களவிற் புணர்ந்து, அவள் தமர் அறியாவண்ணம் தன் ஊர்க்கு உடன்கொண்டு போங்கால், இடையே அவள் சுற்றத்தார் படையொடும் சென்று அவனைத் தடுத்து நிறுத்திப் போராடுதலை ஒக்கும் எனவும்,

"மாமயில் அன்னார் மறையிற் புணர்மைந்தர்
காமம் களவிட்டுக் கைக்கொள் கற்பு உற்றென

மல்லற் புனல்வையை மாமலைவிட் டிருத்தல்."