பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

பதிப்புரை

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றி நாகரிகம் முதிர்ந்தோர் தமிழர்; அவரின் மொழி தமிழ்; இது திருந்திய செவ்விய மொழி; இதன்கண் இயற்கையோ டியைந்த செய்யுட் செல்வங்கள் நிரம்பவுள்ளன. இவைகளைத் தந்த பெருமை - சங்ககாலப் புலவர்க்குரித்து.

இவருள், அதியன் விண்ணத்தனார் முதல், கீரந்தையார் இறுதியாக அறுபத்தறுவர் வரலாறு இதில் வெளி வந்துள்ளன; இதனையும் அவர்கள் பாநயச் செறிவு விளக்கத்துடன் எழுதி உதவியவர், திரு. புலவர், கா. கோவிந்தன் அவர்களேயாவர்.

இதனை, 'அதியன் விண்ணத்தனார்' எனப் பெயர் அமைத்துச் சங்கப் புலவர் வரிசையில் - ௧௪ ஆவதாக வெளியிட்டுள்ளோம்.

தமிழக மக்கள், கற்றல் கேட்டலே பயனென்பதை உணர்ந்து, இதனையும், இதனுடன் தொடர்புற்று வெளிவரும் மற்றைய சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை நூல்களையும், வாங்கிக்கற்று நற்பேறெய்துவார்களென நம்புகின்றோம்.


சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.