பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அதியன் விண்ணத்தனார்


களையும், நோக்கி அவனை அடையுமாற்றினைக் காட்டுவீராக எனக் கலங்கி நிற்கும் இரங்கத்தக்க நிலையினைப் புலவர் எடுத்துக்காட்டுங்கால், காண்பார் தம் கண்களும் கடலாம் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.

"எங்கும் திரிதரு காற்றே! என் நலன் உண்டு ஒளித்தான் யாண்டுளான் என்பதை ஞாயிற்று ஒவியுள் வழியெல்லாம் உட்புகுந்து தேடித்தர வேண்டுகின்றேன்; தாராயேல், என் கண்ணீரைத் தெளித்து, அதன்கண் எழுகின்ற அழலாலே நின்உடல் எலாம் சோக கடுவேன்."

"வளியே! எதிர்போம் பலகதிர் ஞாயிற்று
ஒளியுள் வழியெல்லாம் சென்று முனிபெம்மை
உண்மைநலன் உண்டு ஒளித்தானேக் காட்டீமோ,
காட்டாயேல், மண்ணகமெல்லாம் ஒருங்கு சுடுவேன் என்

கண்ணீ ர் அமலால் தெளித்து."
(நெய்தற்கலி : உஎ)

"காணும் இடம் எங்கும் பரந்து நிற்கும் கடலே! என்னைப் பேணாது பிரிந்து சென்றான் உறையும் இடம் தேடிச் செல்ல இடம் தாரரயேல், நின் நீரெல்லாம் வற்றி வெறுமணலாம்படி என் காற்புறுத்தால் இறைத்துவிடுவேன்; எனக்கு அறக்கடவுளும் துணை நிற்கும்."

"பேணான் துறந்தானை நாடும் இடம்விடா யாயின்
பிறங்கிரு முந்நீர் வெறுமண லாகப்
புறங்காலின் போக இறைப்பேன்; முயலின்

ஆறம்புணை யாகலும் உண்டு."
(நெய்தற்கலி : உ.எ)

"திங்கள் இடை இருந்து, இவ்வுலகெல்லாம் காணும் சிறு முயலே! என் கேள்வன் இவ்விடத் தான் எனக் காட்ட வேண்டுகின்றேன்; காட்டாயேல், நின் பகையாய வேட்டை நாயை நின்பால் விரட்டுவேன்; . வேட்டுவரிடத்தே விரைந்து சென்று, இங்கே உனது ஒரு குறுமுயல் எனக் கூறுவேன்; நினக்கு அரண் அளிக்கும் அத்திங்களும் நீயும் ஒருங்கே அழியுமாறு, அத்திங்களின் பகையாய பாம்பைச் செலுத்துவேன்."