பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரு. இருங்கோன் ஒல்லையாயன்
செங்கண்ணனார்

செங்கண்ணனார் என்பது இவர் இயற்பெயர்; ஆயன் என்பது இவர் குடிப்பெயர், ஒல்லை என்பது இவர் ஊர்ப் பெயர், ஒல்லையூர் என்ற பெயருடைய ஊர், பட்டுக்கோட்டை வட்டத்தில் உளது; ஒல்லையூர்கிழான், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற பெயர்களை நோக்குக. இருங்கோ என்ற சிறப்பு அரசர்க்கு உரியதாக வழங்கப் பட்டிருத்தலின், இவரும் அரசர் மரபினராதலும் கூடும்; இருங்கோன், பெரியகோனார் எனப் பொருள்படும் எனக் கோடலும் பொருந்தும். இவர் பாடிய பர்ட்டொன்று. அகநானூறு மணிமிடைபவளத்தின்கண் இடம் பெற்றுளது; அது காட்டும் அறவுரை ஆண்மக்கள் அறிந்து மேற்கொள்ளத் தக்க அருமையுடையதாம்.

உற்ரறாரும், உறவினரும், உயிர்போலும் நண்பர்களும் வறுமையால் வாடும் வருத்தத்தினையும், தன் பகைவராவர் பொருளுடையராய்ப் பெருமித வாழ்வு வாழ்தலையும், கண்ணெதிம்ர கண்டும், அவர் வாழும் அவ்வூரிலேயே அவரோடு ஒருங்கு வாழ்தல், பொருள் தேடிப் போதல்வேண்டும் எனும் எண்ணமிலராய், மனைவியர் தரும் இன்பமே பெரிதாம் என எண்ணி வாழும் இழிகுணமுடையார்க்கே இயலும். மனைவிழைவார் மாண்பயன் எய்தார்; வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது; “நட்டார் குறை முடியார்; நன்று ஆற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர்” என்பன திருக்குறள். உள்ள! ஊக்கமும், உயரிய எண்ணமும் உடையார், அந்நிலை கண்டு வாழ மனம்பொறார், உற்றார்க்கும், நட்டார்க்கும் உறுபொருள் தாராது வாழ்தலின் உயிர்விடுதலை சாலவும் உயர்ந்ததாம் என எண்ணுவர்; ஒட்டார் உயர்வாழ்வு வாழ, அவர்முன் வறுமை வாழ்வு வாழ்தலினும் மானம் கெட்டநிலை வேறு இல்லை; அத்தகைய உள்ளம் உடையார்க்கு உறக்கமோ, உள்ளத்தில் அமைதியோ உண்டாகாது; இரவும், பகலும்