பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

அதியன் விண்ணத்தனார்


தோற்றுவாய்

ஒரு நாட்டுமக்களின் பண்பாட்டுப் பெருமையினை அறியத் துணைபுரிவனவற்றுள், அக் நாட்டு மக்கள் பெற்றிருக்கும் இலக்கியமே தலைசிறந்தன. எந் நாட்டு மக்கள் பண்பாடுற்றுத் திகழ்கின்றனரோ, அவரிடையே தான் பாராட்டற்குரிய பேரிலக்கியங்கள் தோன்றும்; பண்பட்ட இலக்கியங்கள், ஓராண்டு, ஈராண்டு, ஒரு நூறு ஆண்டுகளில் தோன்றிவிடுவன அல்ல; ஆயிரம் ஆயிரம் ஆண்டுக் காலமாக, வளர்த்துவந்த வாழ்க்கைச் சிறப்பினையுடைய மக்கள் வழியிலேயே, வளம்பட்ட இலக்கியங்கள் வழங்கப்பெறும்; ஆகவே, ஒரு நாட்டு இலக்கியம், இறப்பச் சிறந்த தொன்றாயின், அந் நாட்டு மக்களும், அழகிய பண்பாட்டினை உடையராவர்; இதற்கு மாறாக, அந்நாட்டு இலக்கியம், போற்றுதற்குரிய பண்பாடற்ற தாயின், அந்நாட்டு மக்களும், பிற நாட்டவரால் பாராட்டற்குரிய பண்பாடற்றவராவர். இவ்வாறு, ஒரு நாட்டின் பெருமையினை அறிதற்குத் துணைபுரியும் இலக்கியங்களை, இந் நாட்டாரும், பிற நாட்டாரும் நன்கு உணரும் வகை ஆராய்ந்து வெளியிடுவது, அணு ஆராய்ச்சி நூல், பல நாட்டு அரசியல் நிலை விளக்கும் நூல், பொருள் நிலையுயர வழிகாட்டும் நூல் போன்ற பெரும் நூல்களை வெளியிடுவதினும் சாலச்சிறந்த பணியாம்.

தமிழர், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே. தோன்றிய பழைமையுடையவராவர்; அவர் தம் இலக்கியமும், அவரேபோல், பழைமையும், பண்பாடும் பெற்ற