பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈழத்துப்பூதன் தேவனார்

85

சென்றால், என் போய் நீங்கும்; தலைவன் வந்ததால் நீங்கிற்று என்பதை அறியாத அன்னை, அது தான் எடுத்த வெறியாட்டெடுப்பால் நீங்கிற்று எனப் பிறழ உணர்வாள்; அதனால், இந்நோய்க்குரிய உண்மைக் காரணத்தை உசாவி , அறிந்து நம் மணத்திற்குத் துணைபுரிதல் தடையுறும்; ஆகவே, இந்நோய், தான் எடுக்கும் வெறியாட்டெடுப்பால் நீங்கவில்லை; அதற்கு இந்தன்று காரணம் என்பதை அவள் அறியுமாறு, இந்நோய் நீங்காதிருத்தல் வேண்டும்; அது நீங்காதிருத்தல் வேண்டுமாயின், தலைவன் இன்று வாராதிருத்தல் வேண்டும்; ஆகவே, அவன் வாராமையினை யான் வேண்டுகின்றேன் என வேண்டி நிற்பாளாயினள். தான் விரும்பிய காதலனைத் தாய்தந்தையர் தரத் திருமணம் கொண்டு அன்பு வாழ்க்கை மேற்கொள்ள விரும்பும் ஒரு பெண் உள்ளத்தைப் புலவர் நன்கு திறந்து காட்டியுள்ளார் :

“வெறிஎன உணர்ந்த வேலன், நோய் மருந்து
அறியா னாகுதல் அன்னை காணிய,
அரும்படர் எவ்வம் இன்றுநாம் உழப்பினும்
வாரற்க ! தில்ல! தோழி!............

இலங்குமலை நாடன் இரவி னானே.” (குறுந் : ௩௬௦)