பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலோச்சனார்

89

பெரியன், பொறையாறு என்னும் ஊரை ஆண்டிருந்த ஒரு குறுநிலத் தலைவனாவன் : பொறையாறு சோழ மண்டலக் கடற்கரைக்கண் உள்ளதோர். ஊர்; இது புறந்தை எனவும் வழங்கப்பெறும்; பெரியன், பொறை யாற்றுக்கிழான் எனவும் அழைக்கப்பெறுவன். தாம் வாழிடமாகிய வடநாடு வறுமையுற்றதாக, வாழ்வு கருதித் தென்னாடு போந்த கல்லாடனாரையும் அவர் சுற்றத்தையும் வரவேற்று விருந்தளித்துப் போற்றிய பெருமையுடையவன் ; இத்தகைய பெருமையுடைமையால் பெரியன் என அழைக்கப்பெற்ற இப்பொறையாற்றுக்கிழானைக் கள்வளம் மிக்க பொறையாறுடையான் என்றும், அரசர்தம் பாசறைக்கண் அசைந்து , அசைந்து நிற்கும் யானைகளின் நெற்றிப்பட்டம் ஒளிவிடுமாறுபோல, மீன் பிடிப்பார், கடல்மேற் சென்ற தம் மீன் படகுகளில் இரவில் ஏற்றிய விளக்குகள் ஒளிவிடும் கடற்றுறையாகிய பொறையாறுடையான் என்றும், தன்னேப் பாடிவருவார், தன்னைப் பாடிய பின்னர் வேறு பிறரைப் பாடநினையாதவாறு பெரும்பொருள் அளிக்கும் கொடைக்குணமும், குதிரைகள் பூட்டிய நல்ல பல தேர்களையும் உடையவன் என்றும் பாடியுள்ளார் உலோச்சனார்.

"நறவுமகிழ் இருக்கை நற்றேர்ப் பெரியன்
கட்கமழ் பொறையாறு.' (நற் : க.௩க)

"கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த
கொழுமீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண்சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
ஆடியல் யானை அணிமுகத்து அசைத்த
ஒடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும்
பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்
பரியுடை நற்றேர்ப் பெரியன் விரியிணர்ப்
புன்னையங் கானல் புறங்தை முன்துறை. (அகம்: க.00)

பரதவர், உப்புப்பாத்திகளில் கடல்நீரைக் கொணர்ந்து பாய்ச்சி உப்பு விளைவிப்பர். அவர்தம் இவ்விளைவுக்கு மழை வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை; எனவும், அவ்