பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரெயில் முறுவலார் 99. சிறந்தாரை கங்கை என்றலும் பண்டையோர் வழக்கு. முறுவலார் பாராட்டிய நெடுஞ்செழியன், அக்கால سازانيتهவரும் போற்றும் அருங்குணமுடையாளுதலின், நம்பி நெடுஞ்செழியன் எனச் சிறப்பிக்கப்பெற்றுளான். நம்பி நெடுஞ்செழியன் ஆடவரிற் சிறந்தான் என்பதைப் புலவர் முறுவலார் மிகமிகத் தெளிவாக எடுத்துக்காட்டி உறுதி செய்துள்ளார். - நம்பி நெடுஞ்செழியன், அழகிய மனேவியை மணந்து அவளால் பெறும் இன்பமும் கொண்டான்; காவற்காட்டு மலர் அணிந்தும், கடிமணம் நாறும் சந்தனம் பூசியும் காண்பார் களிக்கும் கவின்பெற்ருன்; பகைவர் குடியைப் பாழ்செய்தான்; நண்பர் புகழை நாவாரப் பாராட்டினன்; என்னினும் வலியர் என் பகைவர் எனப் பயந்து பணி வதோ, என்னினும் எளியர் இவர் என இகழ்வதோ அவன்பால் இல்லை; பிறர்பால் சென்று பொருள்வேண்டி இரத்தலோ, தன்பால் வந்து இரந்து நிற்பார்க்கு மறுத் தலோ செய்தறியான் அவன். அரசர் கூடிய அவைக் களத்தே தன் ஆற்றலும், அறிவும் தோன்றக் காட்டிப் புகழ்பெற்ருன். தன்னைத் தாக்கிய பகைவர் படையினேத் தடுத்து நிறுத்தி வெற்றிகொண்டான் தோற்றுப் புறங் காட்டும் பகைவரைப் பார்த்து கிற்றலன்றிப் படை தொடாது கின்று வீறுகொண்டான். பாய்ந்து செல்லும் பல பரி ஊர்ந்தான்; தேர் பல ஏறித் தெருவில் உலா வந்தான். கடுமதக் களிறுகள் காலடிக் கீழ்ப் பணியுமாறு ஏவல்கொண்டான்; பாணர் பசிபோகப் பலப்பல வழம் கின்ை காய்தல் உவத்தல் அகற்றி ஆய்ந்து அறம் உரைக் தான். சுருங்கக்கூறின், நல்லோர்பால் காணலாம் நற்பண்புக ளெல்லாம், நம்பி நெடுஞ்செழியன்பால் பொருந்தி யிருந்தன. - --- - இவ்வாறு, 'நம்பி" நல்லவன்' என்று காட்டrரால் போற்றப்படும் புகழ் கிறைந்த நெடுஞ்செழியன் இறந்து விட்டான் என்பதை அறிந்தார் முறுவலார்; அவன் பிரிவு ஒருபால் பெருந்துயர் தந்தது. எனினும், அவன் செய்வன.