பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. ஊட்டியார் இயல்பாகவே செங்கிறம் பெற்றிருக்கும் அசோகின் தளிரைச் செவ்வாக்குப் பூசிற்ைபோலும் செந்தளிர் 'ஊட்டி அன்ன ஒண்தளிர்ச் செயலே' என்றும் இயல் பாகவே செங்கிறம் புெற்றிருக்கும் முருகவேள் கை அம் பினேச் செந்நிறம் ஏற்றிற்ைபோலும் அம்பு ஊட்டி யன்ன ஊன்புரள் அம்பு," என்றும் கூறிச் செய்யாத நிறத்தைச் செய்ததுபோலப் பாடிய நயம் கருதி, அக்கால அறிஞர்கள், இவர்க்கு ஊட்டியார் எனப் பெயரிட்டு அழைத்தனர்; மை பூசிய கண்ணே, மையுண் கண் என்றும், உண்கண் என்றும் கூறும் வழக்காறு உண்மையால், உண்ணுதல் என்ற சொல் கிறம்பெறுதல் என்றும், ஊட்டுதல் என்ற சொல் நிறம் ஏற்றுதல் என்றும் பொருள்படுமாறு காண்க. இரவில், உண்டு உறங்கச் செல்வதற்கு முன்னர், ஒருவர் கதைகூற, ஒருவர் அக் கதையினேக் கேட்பது சிற் ஆார்களில் இன்றும் காணப்படும் வழக்கம். அவ்வாறு கதை கூறுவோர் தம் கதையினேக் கூறிக்கொண்டே வர கதை கேட்பவர், இடையிடையே 'உம்' கொடுத்துக் கொண்டே இருப்பர்; கதை கேட்பவரிடமிருந்து, அவ் 'உம்' வாராதுபோனல், கேட்பவர் உறங்கிவிட்டார் என உணர்ந்து, கதை கூறுவோரும், கதை கூறுவதொழிந்து உறங்கச் செல்வர். . . . . . . . . தாய் உறங்கிலைன்றித் தலைவனேக் குறியிடத்தே சென்று காணுதல் இயலாது என உணர்ந்த தோழி, தாய் உறங்கிவிட்டாள் என்பதை உறுதியாக உணர்ந்துகொள் வதற்காக, அவள் படுத்திருக்கும் இடத்தருகே தானும் படுத்து, அவளுக்குக் கதை கூறத் தொடங்குவாள்போல் 'அன்னய் ! நம் தோட்டத்தில் ஒடும் அருவி, ஆங்குள்ள பள்ளங்களில் வளர்ந்திருக்கும் சிறிய கூதளஞ்செடிகளின் தழைமீது வீழ்ந்து ஓடுவதால் உண்டாகும் ஓசை கினக்