பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் சேண் விளங்கு சிறப்பின் செ பியர் மருகன், கொடி நுடங்கு யானே, நெடுமா வளவன் தேவர் உலகம் எய்தின தைலின், அன்னேற் கவிக்கும் கண்ணகன் தாழி வனேதல் வேட்டனே யாயின், எனேயது உம், இருகிலம் திகிரியாப், பெருமலை மண்ணு வனைதல் ஒல்லுமோ கினக்கே." . (புறம்: உஉஆ) பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை யும், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனேயும், தாமான் தோன்றிக்கோனேயும் போற்றிப் புகழ்ந்த புலவர் ஐயூர் முடவனர், தாம் பாடிய அகநானுாற்றுச் செய்யுளொன்றில், கோசர் வழிவந்த இளஞ்சிருர்கள், பலர் ஒன்று கூடிச் சென்று, கடலாடி மகிழும் மகளிர் கொய்து வந்துகொடுத்த புலிநகக் கொன்றைப்பூவின்யும், கழனிகளில் உழவர் பறித்துத்தந்த குவளே ப்பூவினேயும், காவற்காடு சூழ்ந்த முல்லை நிலத்தில் மலர்ந்த முல்லைமலர்களோடு கலந்து, தம் தலைக்கு வேண்டும் மாலேயாகக் கட்டி மகிழ்ந்து விளேயாடும் வளம்நிறைந்த செல்லூரையும், அச்செல்லூர்த் தலேவகிைய ஆதன் எழினியையும், எதிர்கின்று போரிடுவார்மீது எறிந்தவிடத்துச் சுரை சிதையாது சென்று தாக்கவல்ல அவன் வேற்படையினையும் யானேகள் மார்பிற் புண் பெற்று வருந்தி வாடி ஒடி மறையுமாறு, அவற்றின் மீது வேலோச் சும் அவன் போர்வன்மையினையும் எடுத்துக் கூறிச் சிறப்பித்துள்ளார். . . - "கடலாடு மகளிர் கொய்த ஞாழலும், கழனி உழவர் குற்ற குவளேயும், கடிமிளேப் புறவில் பூத்த முல்லையொடு பல்இளங் கோசர் கண்ணி அயரும் மல்லல் யாணர்ச் செல்விக் கோமான் எறிவிடத்து உலையாச் செறிசுரை வெள்வேல் ஆதன் எழினி அருகிறத்து அழுத்திய பெருங்களிற்று எவ்வம்." (அகம் : உகசு)