பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 உறுப்பாலும் சிறப்பாலும் பெயர்பெற்ருேர் பல் யானைச் செல்கெழு குட்டுவனுக்கு இவ்வாறு அற வுரைகள் பல கூறியும், அவன் மறக்குணம் மாருமையினேக் கண்டார் புலவர்; ஒருவர் எவ்வளவு நூல் கற்று, எத்துணை அறிவு பெற்றவராயினும், அவர் இவ்வுலகம் கிலேயற்றது; வாழ்வு கிலேயற்றது; இவ்வுலக இன்பம் அழியும் இயல்பின அ என்ற இந்த அறிவினேப் பெருராயின், அவர் நல்வழிப் படுதல் இல்லை; இந்த உண்மையினே உணர்ந்த பர்லேக் கோதமஞர், சேரன் உள்ளத்தில், இந் கிலேயாமை எண் ணம் தோன்றச்செய்தல் தம் கடன் எனக் கொண்டார்; அரண்மனே புகுந்து அவன்முன் கின்று, 'அறவோன் மகனே!" என அவன் உள்ளத்தே அறவுணர்வு தோன்ற விளித்து 'கின் ஆற்றற் பெருமையைப் பகைவர் அறியின், அதல்ை அவர் ஆக்கம் மிகுமாதலின், அதை அவர் அறியா வண்ணம் மறைத்தும், கின்பால் வந்து குறைவேண்டியும், முறைவேண்டியும் கூறுவார் கூற்றுக்களின் உண்மைகளே உள்ளவாறுணர்ந்தும், பகற்காலத்தே, பகைப்புலம் சென்று போரிடும் நின் ப ைட யா ள ர்க் குத் துணைபுரிந்தும், இரவுக்காலத்தே, அமைச்சர், சான்ருேர் உள்ளிட்டாரோ டிருந்து மேல்செய்யக் கடவ்னவற்றை ஆராய்ந்து நோக்கி 'யும் வாழும் அரசியல் பூண்டிருக்கும் கினக்கு ஒன்று கூறு கின்றேன்; அருள்கூர்ந்து கேட்பாயாக! உலகமுழுதை யும் ஆள்வோர் தாம் ஒருவரே; தம்மையொத்த அரசர் உலகில் யாண்டும் இலர் என்ற பெருமைதோன்றப் பேரரசு மேற்கொண்டு வாழ்ந்த அரசர்களும், இவ் வுலகத்தில் அவர் புகழ் ஒன்றுமட்டும் நிற்க, இறந்து மறைந்தே போயி னர்; கின் நாட்டில் உள்ள சோலைகள்தோறும், நிகழும் வெறியாட்டயர் களத்தில், அக்களத்தில் இனி இடமில்லே என்று கூறுமாறு நெருங்க நிற்கும் ஆடுகள் அனைத்தும் அழிந்துபோவது உறுதியாதலேப்போல், உலகில் வாழும் உயிர்கள் அனேத்தும் ஒருநாள் அழிந்துபோவதும் உறுதி யாம்; ஆதலின் அரசே! கிலேயாமை யுணர்ந்து நல்லது ஆற்றி நெடிது வாழ்வாயாக!' என்று வாழ்த்தினர்: