பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஆ. பெருஞ்சித்திரனுர் பெருஞ்சித்திரனர் ஒரு காவியப்புலவர் மட்டும் அல்லர்; அவரோர் ஓவியப் புலவருமாவர்; அவர் காட்டும் சொல்லோவியங்கள் சுவைக்குந்தொறும் சுவைமிக்குத் தோன்றும். அழகுஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயி சோவியம் அவர் சொல்லோவியம், எனில், அது மிகை மாகாது; பெருஞ்சித்திரனரின் செய்யுட் சிறப்புணர்க் தன்ருே, அக்கால மக்கள் அவர் இயற்பெயரையும் மறந்து பெருஞ்சித்திரனர் என்ற சிறப்புப் பெயரிட்டு வழங்கினர் : தன் தலைதர வாள்கொடுத்த வள்ளல் குமணனும் வெளி மானும் பெருஞ்சித்திரனுரின் பாராட்டைப்பெற்ற பெரி யார்களாவர்; இவர் அன்பைப்பெறும் நற்பேறில்லார், அதிய மானும், வெளிமான் தம்பி இளவெளிமானுமாவர். - கொடைவள்ளல் குமணனைப் பாராட்டிப் பரிசில்பெற . வந்த புலவர் பெருஞ்சித்திரளுர், குமணனுக்கு முன்வாழ்ந்த கொடைவள்ளல்கள் எழுவரையும், வரிசையாக முன் னிறுத்தி வீரவணக்கம் புரியும் திறம்கண்டு வியவாதார் இசார்; அவர்கள் எழுவரும் வள்ளல்களாவர் என்பதை எவரும் அறிவராதலின், அவர்களேக் கூறுங்கால், அவர்தம். கொடைத்தொழிலே எடுத்துக் கூருமல், அவர்க்குச் சிறப் பளிக்கும் அவர் வெற்றிச் செயல்களேயும் வேறு பிற சிறப்புக் களையும் எடுத்துக் கூறியுள்ளார். "முரசுகடிப்பு இகுப்பவும். வால்வளை துவைப்பவும், அரசுடன் பொருத அண்ணல் கெடுவரைக் கறங்குவெள் ளருவி கல்லலேத் தொழுகும் பறம்பிற் கோமான் பாரி.' "பிறங்கு மிசைக் - கொல்லி ஆண்ட வல்வில் ஒரி.”

    • ÆIrff? ஊர்ந்து பேரமர்க் கடந்த

மாரி சகை மறப்போர் மலையன்."