பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உறுப்பாலும் சிறப்பாலும்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்த லச் சாத்தனர் 87. ஆரிடச் செய்யுள்போல, மிகவும் குறையவும் பாடப்படுவன எனக்கொள்க," என வரும் யாப்பருங்கல விருத்தி உரை யால் விளங்கி கிற்றல் காண்க. - - பெருந்தலைச்சாத்தனர், கொடைத்தொழிலால் சிறப் புற்ற குமணன், இரவலர் புரக்கும் குடிவந்த இளவிச் சிக்கோ, கடியநெடு வேட்டுவன், மூவன் ஆகிய குறுகிலத் தலைவர்களைப் பாடிப் பரிசில் பெற்றும், பயன்தரும் கல் லுரை வழங்கியும் உள்ளார் . இவருடைய பாக்கள் அகம், புறம், கற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களுள் இடம் பெற்றுள்ளன. - - ! . குமணன், முதிரம் என்னும் மலையினேயும், அதைச் சார்ந்த சிறு நாட்டையும் ஆண்டிருந்த குறுகில மன்ன வைன்; இம் முதிரமலே, பழனிமலைத் தொடர்கள் பலவற் அறுள் ஒன்று; இம்ம்லேயின் அடிவாரத்தே குமணமங்கலம் என்ற இவன் பெயர்கொண்ட சிற்றுார் ஒன்றும் உளது; இந்நாடு உடுமலைப்பேட்டையைச்சூழ அமைந்திருந்த சிறு நாடாம் என்று கொள்வது பொருந்தும். குமணன் கடை யெழுவள்ளல்கட்குக் காலத்தால் பிற்பட்டவன் ஆல்ை, கொடைக்குணத்தில் அவர் அனேவரினும் சிறந்தோன். தன்சீனப் பாடிவரும் புலவருக்கும், பிற இரவலர்க்கும் இல்லை யெனக்கூறி இழிகிலே பெருது, உவப்பக் கொடுத்து உயர் நிலைபெற்று விளங்கினன். இவ்வாறு பண்பட்ட குடியில் வந்த குமணனுக்கு இளங்குமணன் என்றேர் இளவல் இருந்தான்; அவன் முற்றிலும் அண்ணனுக்கு மாறுபட்ட குணம் உடையவன் : குமணன் புகழும், பெருமையும் கண்டு பொருமை கொண்டான், குமணனைக் கொன்று ஈர்ட்டைத் தானே ஆளவும் வழிதேடினன் , தம்பியின் தகாச் செயலறிந்த குமணன், நாட்டைவிட்டுக் காட்டும், சென்று வாழ்ந்திருந்தான். %. , 'ஒருபுடை பாம்பு கொளினும், ஒருபுடை அங்கண்மா ஞாலம் விளக்கு று உம்-திங்கள்போல் செல்லாமை செவ்வன்கேர் கிம்பினும், ஒப்புரவிற்கு ஒல்கார் குடிப்பிறங் தார்.' (நாலடியார் : க.ச.அ)