பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிலாடு முன்றிலார் 7

அவ்வாறு கூறும் அவள், கணவைேடு வாழும் வாய்ப் பினேப் பெற்றக்கால் தான்்பெறும் பேரழகிற்கு ஒருர் விழா நிகழ்காலத்தே பெறும் பேரழகினையும், கணவன் பிரிந்தக்கால் கவினிழந்து வாடும் தன் வருத்த நிலைக்கு, வாழ்வோரை இழந்துவாடும் ஒர் ஊரின் பாழ்பட்ட கிலே யினையும் உவமைகாட்டி உணர்த்தியுள்ளாள்.

பழந் தமிழ்நாடு விழாக்கள் பல கண்ட பெருஞ் சிறப் புடையது; கார்த்திகைத் திருவிழா, மார்கழித் திருவிழர், வேனில் விழா போன்ற விழாக்களே மக்கள் அன்றே கண்டு மகிழ்க் தள்ளனர்; மதுரை ஆவணி அவிட்டம், உறையூர்ப் பங்குனி உத்தரம், கருவூர் உள்ளிவிழா என இவ்வாறே ஒவ்வோர் ஊர், ஒவ்வோர் விழாவிற்குச் சிறப்புடையதாகவும் விளங்கிற்று.

ஒர் ஊரில் விழா நடைபெறுகிறது என்றால், விழாத் தொடங்குவதற்கு முன்னர், முரசடிக்கும் முதுகுடியிற். பிறந்த முதியோன் ஒருவன் விழாமுரசினே யானைப் பிடர்த்தலையேற்றித் தெருக்கள்தோறும் சென்று, திரு விழை மூதூர் வாழ்க! .

' கிருவிழை மூதார் வாழ்கன் றேத்தி

வானம் மும்மாரி பொழிக மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக !

பசியும், பிணியும், பகையும் நீங்கி

வசியும், வளனும் சுரக்க” (மணிமேகலை க. கூஉ ச; எக-உ) என்று வாழ்த்துரைத்து விழாத் தொடங்கும் நிகழ்ச்சி யினையும், விழா நிகழும் நாட்களேயும் ஊர் மக்களுக்கு அறிவிப்பன்; விழா நிகழ்வதுணர்ந்த ஊர்மக்கள் செற்ற மும் கலாமும் ம்றத்து, விழாச் சிறப்பிற் சென்ற மனத் தினராய் மகிழ்வர்; தோன வீதிகளிலும், தோமறு கோட்டிகளிலும் பூரண கும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு முதலாயவற்றைப் பரப்பிவைத்துப் பாராட்டுவர்; குலைகளோடு கூடிய கமுகு, வாழை, வஞ்சி, வல்லி, கரும்பு போன்ற மரங்களையும், கொடிகளையும் கொணர்ந்து ஆங் காங்கே நாட்டுவர்; வரிசை வரிசையாக விளங்கும் திண்ணை