பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூகைக் கோழியார் 113

நறவுண் செவ்வாய் காத்திறம் பெயர்ப்ப உண்டும், தின்றும், இரப்போர்க்கு ஈந்தும், மகிழ்கம் வம்மோ மறப்போ ரோயே! அரிய ஆகலும் உரிய பெரும! நிலம்பக வீழ்ந்த அலங்கல் பல்வேர் முதுமாப் பொத்திற் கதுமென இயம்பும் கூகைக் கோழி ஆனத் தாழிய பெருங்காடு எய்திய ஞான்றே. (புறம் : உசுச)

இந்தப் பாட்டைப் பாடிய புலவர் கூகைக் கோழியார். கயமனர், ஐயாதிச் சிறுவெண்டேசையார் முகலாய புலவர் கள் வாழ்ந்தகாலத்தே வாழ்ந்தவர். அவர்கள் பாராட்டிய தலைவனேயே இவரும் பாடியுள்ளார்; இவர் பாடிய பாட் டாக நமக்குக் கிடைத்துளது பெருங் காஞ்சித்துறை கழுவிய இப்பாடல் ஒன்றே. இதில் முதுகாட்டின் இயல்பை விளக்கிக்கூறும் பகுதியில், அது முதிர்ந்து பருத்த பெருமரங்களையுடையது; அ ம்ம ர ப் பொந்துகளில் போங்தைகள் இருந்துகொண்டு கேட்பார்க்கு அச்சம் வருமாறு கூவும் என்று கூறிவருங்கால், அப்பேராங்தை பினேக் கூகைக்கோழி என்று பெயரிட்டு அழைத்துள் ளமையால் இவர் பெயர் கூகைக்கோழியார் என வழங்கப்

பட்டது.