பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடித்தலை விழுத்தண்டினர் 121

மட்டுமே என்பதை அறிவித்தற்காம்; ஆண்டு முதிர்க் தோர்க்கு அரியபொருளாக விளங்கும் தடியினைத் தொடித் தலை விழுத்தண்டு எனச் சிறப்பித்துக் கூறினமையால், இப் பாட்டாசிரியர் பெயர் தொடித்தலை விழுத்தண்டினுள் என வழங்கலாயிற்று. -

இந்தப் பாட்டைப் பாடிய புலவர், தொடித்தலே விழுத் தண்டினர் என்பதல்லது, அவர் இயற்பெயரோ, அவர் காலப் புலவர்கள் யாவர் என்பதோ, அவர் பாடல்கேட்டுப் பாராட்டிப் பரிசில் அளித்த பெருங் கொடைவள்ளல் பாவன் என்பதோ எதுவும் அறிந்துகொள்ள முடிய வில்லை. திருவாளர் ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளே யவர்கள், இந்தச் செய்யுள் தொடித்தலே விழுத்தண்டினர், ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனப் பாராட்டிய பாடல்களுள் ஒன்றெனக் கூறி, இப் பாட்டுப் பாடுதற்குக் காரணமாய் இருந்த சூழ்நிலை ஒன்றையும் குறிப்பிடுகிறர். இப்பாட்டிற்கும், ஒல்லையூர் கிழான்மகன் பெருஞ்சாத்த லுக்கும் தொடர்பு உண்டு என்பதை டாக்டர் உ. வே. சா. அவர்களின் புறநானூற்றுப் பதிப்பில் வரும் கொளு உணர்த்தவில்லை; ஆனால், பாடினேர், பாடப்பட்டோர் வரலாற்றில் ஒல்லையூர் கிழான்மகன் பெருஞ்சாத்தனேப் பாராட்டிய புலவர்களுள் ஒருவராக இவரையும் கூறியுள் ளார். ஆனல், தாம் கொள்ளும் பாட பேதங்களுக்கெல் லாம் ஆதாரம் காட்டிச்செல்லும் பண்பினராய டாக்டர் உ. வே. சா. அவர்கள், ஈண்டு அவ்வாறு கொண்டதற்கு ஆதாரமாய சான்று இது என எதையும் கூறினால்லர்; பிள்ளையவர்கள் ஐயர் அவர்களினும் ஒருபடி முன்சென்று, 'ஒல்லையூர் கிழான் மகனை பெருஞ்சாத்தன் பேரிளேயணுய் இருந்தகாலத்தில் ஒருகால் தொடித்தலை விழுத்தண்டினர் என்னும் சான்ருேர் அவனைக் காணச்சென்றார் , சாத்த லும் அவரை மிக்க அன்புடன் வரவேற்று இனிமை மிகப் பேசி அளவளாவினன் ; வேறுபல சான்ருேரும் அங்கே கூடியிருந்தனர்; அக் கூட்டத்தில் இளமையின் வளமை

பற்றிப் பேச்சுண்டாயிற்று ;.......நம் தொடித்தலை விழுக்