பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

سم

குப்பைக் கோழியார் 37

எனக்கூறிப் போர் தொடங்குவதும், கங்கள் சேரிக் கோழி வென்றமை கண்டு மகிழ்வதும் செய்வர்.

இவ்வாறு, போருக்கென்றே வளர்க்கப்பெறும் கோழி கள் மட்டுமே போரிடும் என்பதில்லை; கோழிகள் இயல் பாகவே போர்க் குணமுடையவாம்; பிறரால் வளர்க்கப் பெருமல், குப்பைகளே மேய்ந்தே வளரும் கோழிகளும் போரிடும்; ஆனால் அவற்றின் போர் கண்டு மகிழ்வாரோ, அன்றி அவற்றின் போராட்டத்தை இடைகின்று போக்கு வாரோ எவரும் இரார் ; போரை, அவை தாமே தொடங் கும். காண்பாாைப் பெருமலே போரிடும்; தாமே ஒய்ந்து அடங்கும். -

இத்தகைய குப்பைக் கோழிகளின் போரை உணர்ந்த புலவர், தலைமகள் கொண்ட காமநோய், களைவார் எவ ரையும் பெருமல் விடப்பட்ட கிலேயினே விளக்க, பிறரால் டப்படாமல், கண்டு மகிழ்வாரையும் பெருமல், இடை யிட்டு நீக்குவாரையும் இன்றி, தாமே தொடங்கி, தனி யிடத்தே போரிட்டு, தாமே ஒய்ந்து ஒழியும் குப்பைக்

கோழிகளின் போரை உவமையாகக் கொண்டார்.

எவர் கண்ணிலும் படாமல், எங்கோ நிகழ்ந்து ஒழிந்து போகும் இழி நிலையுடையதான் குப்பைக் கோழிகளின் போரினை, அறிவுடைப் பெருமக்கள் எல்லாம் அறிந்து பாராட்டுமாறு, தம் பாட்டில் அழகிய உவமை வடிவில் எடுத்துக்காட்டிய புலவர் பெருந்தகைக்கு, குப்பைக் கோழி யார் என்ற அவ் உவமையாலாய பெயர் எத்துணேப் பொருத்தமுடைத்து !