பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 உவமையாற் பெயர்பெற்ருேர்

வாழ்வாரை இழந்து பாழான இடங்களே அனுகவும் பார்க்கவுமே மக்கள் அஞ்சுவர் ஆதலாலும், ஆங்குப் பேணத் தக்க பொருள் ஒன்றும் இராது. ஆதலாலும், அவ்விடங் களைக் காக்கவேண்டிய நிலைமை எவர்க்கும் உண்டாகாது ; அவ்விடங்களைக் காவல்புரியக் கருதுவோரும், அக்காவற் ருெழிலை ஏற்க முன்வருவோரும் எவரும் இரார்.

ஆனல், அத்தகைய பாழ் இடங்களேயும் காத்தல் வேண்டும் என்றுகொண்டு, அக்காவற்ருெழிலைத் தனியே ஒருவன்பால் ஒப்படைக்க, அவனும் அவ்விடத்தே சென்று இரவு பகலாகத் தான்் ஒருவனுகவே கின்று காத்து கிற் பான் எனில், அவன் கிலே என்னும் அக்காவற்ருெழிலும் ஒருநாளில் ஒழியாத தொடர்ந்து செல்வதாயின் அவன் துயரின் கொடுமைக்கும் ஒர் எல்லே உளதாமோ ? அத்தி கைய தயாாளன் ஒருவனே, புலவர் தனிமகளுர் தம்முடைய பாட்டொன்றின் உவமையாக மேற்கொண்டுள்ளார்.

கணவன் பொருளி ட் டும் முயற்சிமேற்கொண்டு பிரிந்து சென்றுளான் ; சென்ற காலை, கார்காலத் தொடக் கத்தே கில்லாது மீண்டுவிடுவேன்; வருந்தற்க என்று தன் காதலிபால் கூறிச் சென்றிருந்தான்்; அவன் மனேவியோ அவன்பாற் கொண்ட பேரன்பினள் ; அவனே அன்றுவரை பிரிந்தறியாதவள் ; என்ருலும், இல்லறம் நல்லறமாகப் பெரும்பொருள் தேவை என உணர்ந்த கடனறி உள்ளத் தவளாகலின், அவன் கூறிச்சென்ற கார்காலம் வரும்வரை ஒருவாறு ஆற்றியிருந்தாள்.

கார்காலம் தொடங்கிவிட்டது; அவன் வரவில்லை : கீழ்க்கடல் நீரை வாரிக்கொண்ட மேகங்கள், கொண்டல் கொண்டலாக எழத் தொடங்கிவிட்டன; அவன் வந்திலன்; மேகங்கள் மேலேத்திசைநோக்கி எழலாயின ; அப்போதும் அவன் வந்திலன்; மேகங்கள் எழுந்து பரந்துவிட்டமை பால், உலகெலாம் இருண்டுவிடுவதையும் கண்டாள் ; ஆனுல் அவனேக் கண்டிலள் ; உலகிருள் எல்லாம் ஒருங்கே ஒழித்து, அவ்வுலகெலாம் நன்கு தோன்றுமாறு தோன்றிய