பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ஒளவையார்

யாய்க் கருத்துரை பல கூறுவதைக் கடனாகவும் கொண்டு. வாழ்ந்த அப்பழந் தமிழ்ப் புலவர் வாழ்க்கை வரலாறு, இக்காலப் புலவர்க்கும், 'அறிவு கூறும் உரிமை அற்றவர் புலவர்' எனக் கருதும் அரசியல் தலைவர்க்கும் வழிகாட்டியாய் நின்று வாழ்விக்குமாக.

நாம் யாருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகின்றோமோ, அவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தே வாழ்ந்தவராவர். "ஒருவர் வாழ்க்கை வரலாற்றை அறிவிக்கும் வாயில்களாய் இருப்பன ஒன்று : தங்கள் வாழ்க்கை வரலாற்றைத் தாங்க'ளாகவே எழுதி வைத்திருக்கும் தம் வரலாறுகள் (Autobiographies), இரண்டு: தங்கள் வாழ்க்கையின் அன் ருட நிகழ்ச்சிகளைத் தாங்களாகவே எழுதி விட்டுச் சென்ற நாட்குறிப்புக்கள் (Diaries), மூன்று: அவர்கள் காலத்தே வாழ்ந்து அவர்களோடு பழகியோர் சிலர் எழுதி வைத்த, அவர் வரலாறுகள் (Biographies): ஈண்டுக் குறிப்பிட்ட இவையே, ஒருவர் வரலாற்றை உள்ளவாறு அறிய உதவும் வரலாற்றுச் சான்றுகளாம். இவற்றுள் ஒன்றும் இல்லா விடத்தே, அவர்கள் வாழ்ந்த காலத்தே வாழாது போயினும், அவருக்குப் பிற்பட்ட, ஆனால் அவர்க்கு மிகவும் அண்மைக் காலத்தில் வாழ்ந்த சிலர், அவர்பற்றி முன்னேர் கூறக் கேட்டனவற்றைக் குறித்து வைத்தனவும் வரலாற். அறுத் துணையாம் இயல்பினவே ஆம்.)

ஆனால், இங்கு நாம் அறிய விரும்பும் புலவர்தம் வாழ்க்கை வரலாற்றை அறிவிப்பதில் மேற்கூறியன துணே புரிகின்றனவா எனில் இல்லே என்றே கூறலாம். புலவர்கள், தம் வாழ்க்கை வரலாற்றை வகைதொகையாக எழுதி விட்டுச் சென்றாரல்லர்; அவர் காலத்தே வாழ்ந்த வேறு பிறரும் அவரைப்பற்றி எழுதி வைக்கத் தவறி விட்டனர்; அவர் காலத்திற்கு அண்மையான பிற்காலத்தே வாழ்ந்தோரில் யாரேனும் அவர் பற்றிக் குறித்து வைத்தனரா எனின், அதுவும் இல்லே. இப்போது நமக்குக் கிடைக்கும் சான்றுகள் எல்லாம், புலவர்கள். அவ்வப்போது எழுதி: