பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*94 ஒளவையார் ஆண்டுகள், சில கழிந்தன . காசிசென்ற பகவன், கங்கைர்ே கையிற்கொண்டு மீண்டு வரும்போது, அதே அறச்சாலையில் த்ங்க, விதி கடைக் கூட்டிற்று அப்போது இளமை அளித்த ஈடிலா அழகோடு விளங்கும் அதே பெண், அங்குவர, பகவன், அவளேக் கண்டு காதல்கொண்டு கருத் திழந்து நிற்பாயிைனன். அவனே , அந்நிலைக்கண் கண்ட திேயையன், பகவனே அடுத்து, "ஐய! அவள் என் பெண் ; விரும்பினல் மணம் முடித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினர் அவனும் இசைந்தனன் திருமணம் இனிது ங்டந்தது; திருமணத்தன்று ஐந்தாம் நாள் நிகழ்ந்த எண் ணெய் ரோட்டின்கண், அவள் தலையில் சட்டுவத்தால் ஏற். பட்ட வடு இருப்பது கண்டு, அவள் வரலாறு கேட்டறிந்து, -- தன் கையால் அடியுண்ட ஆதியாள் (அப்பழைய பெண்) அவள் என்பதறிந்து, அவளோடு வாழமறுத்து வெளி யேறிச் செல்லலாயினன்; அன்றுமுதல் அப்பெண்ணிற்கும் ஆதி என்பதே பெயராயிற்று. - - அவன், தன்னே வெறுத்துச் செல்லுகிருன் எனினும் அவள் அவனே விடாது பின்பற்றிச் செல்லத் தொடங் கிள்ை; ஏது கூறியும் விடாது பின்தொடரும் அவளே, இடைவழியில் மறுத்து, 'பெண்னே! நான் எவ்வளவு கூறியும் நீ கிற்க மறுக்கிருய், உனக்கு உண்மையில் என் :பால் அன்பிருக்குமாயின், நான் கூறியவாறு கேட்டல் வேண்டும்: அஃதாவது, உனக்குக் குழந்தைகள் பிறக்கு .மாயின், அவற்றைப் பிறந்த இடத்திலேயே விட்டுப் பின் தொடர்ந்து வருதல் வேண்டும்; இதற்கு இசைவையாயின், ஆகின்னே யான் ஏற்றுக்கொள்வேன்” என்றனன்; அவளும் அதற்கு இசைந்து அவனுடன் சென்ருள்: இடையில் பாணர் சேரியில் ஒருங்ாள் இரவு தங்கினர்; அங்கே அவள் வயிற்றில், அரன் கட்டளேப்படி, கலைமகள், ஒளவையாராக வந்து பிறந்தாள்; கணவன் கட்டளேக்குப் பணிந்து, குழந்தைகளே விட்டுப்பிரியும் அவள், குழந்தையின் எதிர் -காலம், கோக்கி எண்ணி இரங்கி ஏங்குவாளாயினன்; தாயின் துயர்கிலே கண்ட அக் குழந்தை,