பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஒளவையார் (டு) விநோதரச மஞ்சரி: ஒளவையார், மதுரையில் க்டைச்சங்கமிருந்த காலத்தில் உறையூர் என்னும் பட்ட ணத்தின் ஒரு சாவடியில் ஆதி என்பவளுக்கும், பகவன் என்னும் அந்தணனுக்கும் முதன் மகளாகப் பிறந்தனர். (சு) பன்னிரு புலவர் சரித்திரம் : வேதமொழி என்பா ருக்குப் பேராளி என்று ஒரு மகன் பிறந்தான்; அம் மிக ானுக்குப் பன்னிரண்டாம் யாண்டு கிகழ்கையில், அவ்வூரில் வாழ் ஓர் இழிகுலத்தானுக்குப் பெண் மகவொன்று பிறந்: தது ; அப் பெண் பிறந்தமையால், ஊர்க்கு அழிவுண். டாம் எனக் கொண்டு ஊரார் அப்பெண்ணேக் கொல்லத் துன்னிந்தனர்; ஆல்ை, வேதமொழியார், அப் பெண்ணே, ஒரு பேழையுள் வைத்துக் காவிரியில் விடுத்தார்; ஆற்றில் வந்த அப் பெண்ணே, அந்தணன் ஒருவன் எடுத்து வளர்த் தான் ; சில ஆண்டு கழித்து, தீர்த்த யாத்திரை குறித்து அங்குவந்த பேராளியார், அப்பெண்ணே மணம் செய்துF கொண்டார். மணம் முடிந்த பின்னர், அவள் தன் தந்தை. யால் ஆற்றில் விடப்பட்ட இழிகுலப் பெண்ணே என்ப. தறிந்து அவளே விட்டுப் பிரிந்துபோயினர் பேராளியார்,; அப் பெண் தன்னேக் காத்துவந்த அந்தணன் விட்டுச் சென்ற பெரும் பொருளோடு காசி சென்று, ஆங்கே அறச் சாலை யொன்று அமைத்து, ஆங்கு வருவோர்க்கு அன்ன் மிட்டு, அவர்பால் தன் வரலாறு கூறி அழுது வருவாளாயி ள்ை ; ஒரு ங்ாள், பேராளியார் அங்குவர, அவள் அவர்க் கும் அன்னமிட்டு, வழக்கம்போல் தன் வரலாறு கூறி அழுதாள் : அக்கிலேயில் அவர் அவள் தற்குணம் கண்டு, அன்று முதல் அவளோடு வாழத் தொடங்கினர் ; பின்னர் அவர்களுக்குப் பிறந்த மக்கள் எழுவரில் ஒளவையாரும் ஒருவர். - - ஒளவையார், பிறந்த முறைகுறித்தும், அவர் பெற். ருேர் குறித்தும் வழங்கும் கதைகள் இவை. (2) ஒளவையாரும் விநாயகரும்: .ஒளவையார் நாள்தோறும் காலேயில் எமுந்ததும். கடவுளரில் முதல்வராகக் கருதப்படும். விநாயகரை வழி