பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஒளவையார் (3) ஒளவையாரும் முருகனும்: ஒருநாள் ஒளவையார், தாம் செல்லக் கருதிய ஒர் ஊருக்குச் செல்பவர், காடொன்றைக் கடந்து செல்ல வேண்டியதாயிற்று, அப்போது முருகன், ஒளவையாரின் அறிவுத் திறன் கண்டு அக மகிழ எண்ணினன்; உடனே அவன் எருமைக்கன்று மேய்க்கும் இடையர்குலச் சிறுவன் போல் உருவெடுத்து, ஒளவையார் வரும் வழிக்கண் உள்ள, காவல்மரத்தின் கிழலில் மாடுகளை மேயவிட்டு, மரமேறிக் கனி பறிப்பான்போல் அமர்ந்திருந்தான்; கோடை வெயில் கொளுத்தும் அக் காட்டு வழியில், ஆண்டு முதிர்ச்சியால், கடை மெலிந்து களத்து வந்த ஒளவையார், அந் நாவல் மரத்தையும், மரத்தில் கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும் கருநாவற் கனிகளையும், அக் கனிகளைப் பறித்து உண்ணும் சிறுவனேயும் கண்டார். காவறட்சி, காவற் கனியைக் கண்டதும் மிகுதியாயிற்று; அச் சிறுவனே அன்புடன் அழைத்துச் சில கனிகளைப் பறித்துப் போடு மாறு வேண்டினர்; உடனே, அச் சிறுவன், “பாட்டி! இங்கே இரண்டு வகைப் பழங்கள் உள்ளன; ஒன்று சுடும்; மற்ருென்று சுடாது. அவற்றுள் உனக்கு எது வேண்டும் சொல்,” எனக் கேட்டணன், ஒளவையார்க்கு அவன் கேள்வி வியப்பை அளித்தது; நாவற்கனியில் சுடுபழம், சுடாப்பழம் என இருவகையிருப்பதாக, அவர் அன்றுவரை அறிந்தவரல்லர் ஆண்டிலும், உலக அனுபவத்திலும் முதிர்ந்த தனக்குத் தெரியாத ஒன்றை, அச் சிறுவன் அறிந்திருப்பது காண ஒளவையார்க்கு நாணம் மிகுந்தது; அதை ஒருவாஅ அடக்கிக்கொண்டு, அப் பையனே நோக்கி, 'அப்பா! கொளுத்தும் வெயிலின் கொடுமையை என்னல் தாங்க இயலவில்லை; இதற்கு மேல் சுடுபழம் உண்பது கூடாது; கடாப்பழமாயின் காவறட்சியையும் தணிக்கும்; ஆதலின், சுடாப்பழமாகவே பறித்துப் போடு," என்றனர். உடனே கிறுவன் நன்கு கனிந்த கனிகள் சிலவற்றைப் பறித்து ஒளவையார் முன்னே மணலில் விசிளுன்; பழங்கள் கன்கு பழுத்திருந்ததால், மணல் மீது விழுந்த உடனே,