பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*100 ஒளவையார் அறம்பு நாட்டிற்கும் உரியோனவன் குறுகில மன்னகிைய அவன், புகழ் பெருக வாழ்தல், பேரரசர்களாகிய தங்கள் பெருமைக்கு ஏற்றதன்று என்று எண்ணிய தமிழ் மூவேந்: தர் எப்படியோ அவனே அழித்துவிட்டனர்; அவன் இறந்த பின்னர், அவன் உயிர் நண்பராகிய கபிலர், அவன் மகளிர் இருவரையும் உடன் அழைத்துக் கொண்டு விச்சிக் கோன், இருங்கோவேள் என்ற இரு குறுகில மன்னர்பால் சென்று 'மணம் செய்து கொள்ளுங்கள் இம் மகளிரை,” என மன்ருடியும், பாரிக்கும், மூவேந்தர்க்கும் உண்டாய பகை கண்டு அஞ்சி, அவர்கள் மறுப்பது கண்டு, மனம் மிக நொந்து, மகளிர் இருவரையும் தமக்கினிய பார்ப்பார் சிலர் பால் ஒப்படைத்துப் பாரியின் பிரிவாற்ருது வடக்கிருந்து உயிர் விட்டார். . . . . . . - - பார்ப்பார் இல்லத்தில், அவ்விள மங்கையர் வாழ்ந்: திருந்தகாலே, ஒருங்ாள், பெருமழை பெய்து கொண்டிருக் கையில், ஒனவையார் முழுதும் நனேந்த மேனியராய் அள் வில்லுள் நுழைந்தனர்; வந்தவர் ஒளவையார் என்பதை உணர்ந்த அம் மகளிர், ஒளவையாரை அணுகி, கனேந்த அவர் ஆடையை அக ற்றினர், உடுத்துக் கொள்ள அவர்க்கு வேறு ஆடை இன்மை அறிந்து, தங்கள் நீலச் சிம்ருடை கொடுத்து நடுங்கும் அவர் குளிர் போக்கினர்; கொல்லேயில் கொழுந்துவிட்டு வளர்ந்திருக்கும் கீரையைப் பறித்துக் கொணர்ந்து, சுவைபடச் சமைத்துச் சூடுடன் அளித்து, ஒளவையார் பசியையும் போக்கி, அவர் உடற்கும், உள்ளத் திற்கும் ஊக்கம்.ஊட்டினர். 'இன்னுது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும்,அளவு" (திருக்குறள் : உஉச) என்ற குறள் உரையைப் போற்ருது, வந்தவர் இன்முகம் கானும் வரை பொருள்களே வாரிவழங்குவதே வாழ்வின் அய்ன் எனக் கருதியதாலேயே அவர்கள் தந்தை உயிர் துறந்தான்; அவர்கள் அதை அறிந்திருந்தார்கள் அறிக் திருந்தும், . -