பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. ஒளவையார் உங்களே ஏவியோன் நான் என்பதும், அவர்க்குத் தெரிதல் கூடாது.” என எச்சரித்து அனுப்பினுன் அவர்களும் அவ்வாறே செய்து முடித்தனர்; காட்டு வழியில் கைப் பொருள் இழந்த ஒளவையார், பாரிபால் சென்று நடந்தன. கூறி மீண்டும் பரிசில் பெற்றுச் செல்லலாம் என எண்ணி, அவன்பால் மீண்டும் வந்து கிகழ்ந்தனகூறி கனி வருந்தினர்: பாரி, அவர் துயர்க்கு வருந்துவான்போல் காட்டிக் கொண்டு அவர் மீண்டது.கண்டு அகத்தே மகிழ்ந்து, அவரை மேலும் சிலநாள் தன் அரசவையில் இருத்தி: மகிழ்ந்து, பின்னர் அவர்க்கு வேண்டுவன அளித்து வழி அனுப்பின்ை. இஃது ஒரு நிகழ்ச்சி. பெண்ணேயாறு பாயும் திருமுனைப்பாடி நாட்டைத் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த வன் மலையமான் திருமுடிக்காரி என்பவன் ; போரில் பேராற்றல் வாய்ந்த பெருந்தகை தமக்குத் துனேயாக இவனேப் பெறுவதில், மூவேந்தரும் போட்டியிடுவர் ; இவன் யார்க்குப் படைத்துணே அளிக்கின்ருனே அவரே வெற்றி" பெறுவர் ; அத்தகைய ஆண்மையாளன் ; மேலும் பெருங் கொடைவள்ளல்; புலவர் பலர் புகழ வாழ்ந்தவன் அவனேப் பாடி அவன்பால் பரிசில் பெறச் சென்றிருந்தார் ஒளவை யார். அவனும், பாரியைப்போன்றே அவரை எளிதில் விட்டுப் பிரிய விரும்பாது, பரிசில் கொடாது நீட்டித்தான்;. ஒளவையாருக்கோ வேறிடம் செல்ல விழைவு ஒருநாள் காரி, அவன் கொல்லேயில் பயிர்க்ளுக்கிடையே தோன்றிய களேகளைக் கொத்திப் போக்கிக் கொண்டிருந்தான் : தன் விருப்பத்தை அறிவித்து விடைபெறவேண்டி அவ்விடம் சென்ருர் ஒளவையார் ; அவர் அங்கு வந்ததன் காரணத். தைக் குறிப்பால் அறிந்த அவன், ஒளவையாரை நோக்கிப் ‘புலவர் பெருந்தகையிர் 1 கிலமோ அளவிற் பெரிது; களேயோ கணக்கின்றி முளேத்துள்ளன போக்கும் ஆட்கள் கிடைப்பதோ அரிதாக உளது ; ஆகவேதான், நானும் இத் தொழிலே மேற்கொண்டேன் ; தாங்களும் தங்களால் இயன்ற அளவு சற்றுத் துணைபுரியின் நலம்,” எனக் கூறின்