பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையாரைப் பற்றிய கதைகள் i03. கொண்டே அவர் கையிலும் களேபோக்கும் கருவியொன் றைக் கொடுத்தனன் ; அவன் வேண்டுகோளே மறுக்க மாட்டாத ஒளவையாரும் அவன் அளித்த பணியை ஏற்றுக்கொண்டு அவனுக்குத் துணைபுரிந்தனர் ; பின்னர் நாள்பல கழித்து அவன் அளித்த பரிசில் பெற்று மீண்டார்: மற்ருெரு நிகழ்ச்சி இது. சேர வேந்தன் அவையில் சிறப்புடன் வாழ்ந்திருந்தார் ஒளவையார் ; அப்போது, அங்குப் பெரியதொரு விருங் தொன்று நடைபெற இருந்தது ; விருந்துண்ணப் பலரும் வந்து, தமக்கென அளிக்கப்பட்டிருந்த இடங்களில் அமர்ந்துவிட்டனர்: அவர்களுள் ஒருவராய் ஒளவையாரும் அமர்ந்திருந்தார்; அஃது சோமானுக்குப் பிடிக்கவில்லை : ஒளவையாரைத்தன்ளுேடு இருத்திக் கலந்துண்ண விருப்பம் என்ருலும் அமர்ந்தவரை எழுப்புவது நன்றன்று : எழுப்புவதாயின் யாது கூறி எழுப்புவது என எண்ணிக் கொண்டிருந்தான் ; அங்கிலேயில், சிறந்த விருந்தினர் ஒருவர் வந்து சேர்ந்தார் . ஆல்ை அவர் இருக்க இடம் இல்லே : அவருக்கு இடம் அளிக்க வேறு யாரையும் அழைத்தல் கூடாது இடம் ஒழித்துத் தருமாறு உரிமையோடு அழைக்கக்கூடியவர் ஒளவையார் ஒருவரே என்பதை உணர்ந்தான் , அதனுல், வந்தவர்க்கும் இடம் கிடைக்கும் , தன் ஆசையும் நிறைவேறும் ; ஆகவே, அவரை விளித்து 'ஒளவையே வாராய் பின்னர் நாம் இருவரும் ஒருங் கிருந்து உண்ணலாம்,' என உரிமையோடு அழைத்தான் ; அவரும் எழுந்து, வந்தோர்க்கு இடம் அளித்துப் பின்னர்ச் சேரைேடு இருந்து உண்டு மகிழ்ந்தனர், இஃது அவர் வாழ் வில் நிகழ்ந்த வேருெரு நிகழ்ச்சி. இம் மூன்று நிகழ்ச்சிகளேயும், தம் மனக்கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி, அவற்ருேடு, வாழ்வுகெட்ட தம் வறுமை நிலையிலும், அவ்விள மங்கையர், தமக்கு அளித்த நீலச் சிற்ருடைப் பரிசிலே ஒப்பிட்டு நோக்கி, உயர்த்திக் கூறிக் கீழ்வரும் பாக்களேப் பாடிப் பாராட்டினர். -